மதுரை:
மதுரையைத் தொடர்ந்துதிண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஜூலை 11-ஆம் தேதி நிலவரப்படி மதுரை-3,843, திண்டுக்கல்-232, தேனி-1,066,விருதுநகர்-994, இராமநாதபுரம் 1,026 என்ற எண்ணிக்கையில் தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.திண்டுக்கல்லில் நான்கு பேர் பலிதிண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் நான்கு பேர் பலியானார்கள். இதுவரை மாவட்டத்தில் 24 பேர் பலியாகி உள்ளனர்திண்டுக்கல்லைச் சேர்ந்த 68 வயது முதியவர், நிலக்கோட்டை சேர்ந்த 58 வயது முதியவர், 46 வயது ஆண், நிலக்கோட்டை சேர்ந்த 58 வயது ஆண் உட்பட நான்கு பேர் ஞாயிறன்று உயிரிழந்தனர்.