சென்னை,நவ.23- தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு திருவண்ணா மலை, கடலூர் விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.