வலங்கைமானில் தொடர் மழை: பயிர்கள் பாதிப்பு நிவாரணம் ரூ.30 ஆயிரம் வழங்க கோரிக்கை
திருவாரூர், அக்.22 - வலங்கைமான் பகுதி யில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ. 30 ஆயிரம் வழங்கிட கோரி சிபிஎம் - விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வலங்கைமான் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில், “திருவா ரூர் மாவட்டம், வலங்கை மான் ஒன்றியத்தில் கடந்த அக்.17 அன்று முதல் தொ டர் மழை பெய்து வருவ தால், வலங்கைமான் ஒன்றி யத்தில் உள்ள பூனாருப்பு, சாரநத்தம், மாணிக்கமங்க லம், ரெகுநாதபுரம், அர வூர், மாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப் பட்ட குறுவை பயிர்கள் சுமார் 2000 ஏக்கர் அளவு தண்ணீ ரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல், அழுகும் நிலையில் உள்ளது. அதே போல் சம்பா, தாளடி வயல் களில் விதைப்பு விதைத்த நிலங்களும் மழை நீர் வடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்கள் விளைநிலங் களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணி யன், ஒன்றியத் தலைவர் எஸ். இளங்கோவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.