தொடர் மழை தஞ்சாவூரில் 1,700 ஏக்கர் நெற் பயிர்கள் பாதிப்பு
தஞ்சாவூர், அக்.22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப் பட்டுள்ளன. மாவட்டத்தில் ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையான திங்கள் கிழமை பகலிலும், இரவிலும் மழை இல்லை. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை அதிகாலை முதல் தொ டர்ந்து, மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.99 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்ட நிலையில், ஏறத்தாழ 1.90 லட்சம் ஏக்கரில் அறுவடை நிறை வடைந்துள்ளது. இந்நிலையில், ஒரத்தநாடு, அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் அறு வடைக்கு தயார் நிலையிலுள்ள குறுவை பருவ நெற்பயிர்களில் ஏறத்தாழ 1,450 ஏக்கரில் பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி அருகேயுள்ள நல்லவன்னியன்குடி காடு கிராமத்தில் ஏராளமான வயல்களில் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் பயிர்கள் தொடர் மழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி, மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால், ஏக்க ருக்கு 40 மூட்டைகள் கிடைக்க வேண்டிய மகசூல், மழை பாதிப்பால் 5 மூட்டைகள் கூட கிடைப்பது சிரமம். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாது. அறுவடை செய்தா லும், நட்டத்தைத்தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சுரேஷ் வலியுறுத்தினார். இளம் பயிர்கள் மூழ்கின இதேபோல, மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.07 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்டுள்ளது. இந்நிலையில், நடவு செய்யப்பட்டு 10 நாட்களுக்கு உட்பட்ட ஏறத்தாழ 250 ஏக்கர் இளம் பயிர்கள் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்வதால், பாதிப்பு பரப்பளவு இன்னும் அதி கரிக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. நனையும் நெல் குவியல்கள் ஏற்கனவே அறுவடை செய்யப் பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து தொ டர்ந்து காத்துக் கிடக்கின்றனர். கொள்முதல் பணி தாமதம் காரண மாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெல் குவி யல்கள் மழையில் நனைந்து வரு கின்றன. இதனால், நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேக்கம் ஒரத்தநாடு அருகே மேல உளூர் தெற்கு தெருவில் தொடர் மழை மற்றும் வடிகால் பிரச்சனை காரணமாக குடியிருப்பு பகுதிக் குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தகவலறிந்த வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறையினர் தண்ணீரை வடிந்து செல்வதற் கான நடவடிக்கையில் ஈடுபட்ட னர். மழையளவு அக்.21 காலை 8.30 மணி முதல் அக்.22 ஆம் தேதி காலை 5:30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு (மில்லி மீட்ட ரில்): தஞ்சாவூர்-29.20, வல்லம்-17.60, குருங்குளம்-35.20, திருவை யாறு-43, பூதலூர்-58.40, திருக் காட்டுப்பள்ளி - 46.20, கல்லணை -34.40, ஒரத்தநாடு- 25.40, நெய் வாசல் தென்பாதி-46.80, வெட்டிக்காடு-25.40, கும்பகோணம்- 36, பாபநாசம்-29, அய்யம்பேட்டை- 54.20, திருவிடைமருதூர்-55, மஞ்சளாறு-46.40, அணைக் கரை-47, பட்டுக்கோட்டை-43, அதி ராம்பட்டினம்-25.90, ஈச்சன்விடுதி -33, மதுக்கூர் 26.80, பேரா வூரணி-46, மாவட்டம் முழுவதும் மொத்தம் - 803.90 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.