சோழவந்தான் பகுதியில் தொடர் கனமழை 1000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
விவசாயிகள் வேதனை மதுரை, அக்.22– மதுரை மாவட்டம் சோழவந் தான் பகுதி, முல்லை பெரியாறு பாசனத்தால் பெருமளவில் நெல் பயிரிடப்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் சுமார் 20,000 ஏக்கர் நெற் பயிர்கள் வளர்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை தொட ங்கிய நிலையில், கடந்த ஒரு வார மாக தொடர் கனமழை பெய்து வரு கிறது. இதனால் சோழவந்தான், இரும்பாடி, கருப்பட்டி, அம்மச்சி யாபுரம், பொம்மன்பட்டி, நாச்சி குளம், கரட்டுப்பட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நெற் பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தொடர் மழை மற்றும் வைகை அணையிலிருந்து வெளியேறும் நீர் கால்வாய் மூலமாக வாய்க்கால் களில் அதிக நீர்வரத்து இருந்தா லும், பாசன கால்வாய்கள் முறை யாக தூர்வாராததால் விவசாய நிலங்களில் நீர் தேங்கி, நெற் பயிர்கள் முழுவதும் நனைந்து அழு கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், “சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால்,ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக சேதமடைந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாசன கால் வாய்களை முறையாக தூர்வார வேண்டும்” என கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து விவசாயத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர்.