tamilnadu

பேராவூரணி அருகே ரூ.1.28 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

பேராவூரணி அருகே  ரூ.1.28 கோடியில்  புதிய சாலை அமைக்கும்  பணி துவக்கம் 

தஞ்சாவூர், ஆக. 4-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், களத்தூர் ஊராட்சி, களத்தூர் ஆதிதிராவிடர் காலனி முதல், சித்துக்காடு பாலக்கரை வரை சுமார் 1.80 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய தார்ச்சாலை ரூ.68.63 லட்சம் மதிப்பீட்டிலும், காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு - ஆணைக்காடு இணைப்பு சாலை சுமார் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது.  இந்தப் பணிகளை, திங்கட்கிழமை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், செருவாவிடுதி சி.துரைராஜ், களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.