tamilnadu

img

விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து உரிய விசாரணை நடத்திடுக!

விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து உரிய விசாரணை நடத்திடுக!

புதுதில்லி விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: நாட்டில் விமானப் பயணிகள் மிக மோசமான முறையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் இரு  ஏகபோகங்களின் ஆட்சி உருவானதன் விளை வாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கட்சி பார்க்கிறது. நீதித்துறை உத்தரவுகளைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகள், விமானப் பணியாளர்களை, குறிப்பாக விமானிகளை சோர்வடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரும் லாபம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலின் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற போதிய அளவிற்கு நேரம் இருந்த போதிலும், இண்டிகோ நிறுவனம் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் அதன் செயல்பாடுகள் கிட்டத்தட்ட நிறுத்தப் பட்டன. இதன் விளைவாக சிவில் விமானப்  போக்குவரத்து இயக்குநரின் புதிய விதி முறைகளை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இண்டிகோ விமானங்களின் திடீர் இடையூறு மற்ற விமான நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது, மருத்துவ அவசர நிலை களுக்கு கூட விமானப் பயணத்தை சாத்திய மற்றதாக்கி இருக்கிறது. தற்போதைய நெருக்கடி பல ஆண்டுக ளாக விமானப் போக்குவரத்துத் துறையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு குறைபாட்டின் இயல்பான விளைவாகும். இது மற்ற உள் கட்டமைப்புத் துறைகளுக்கு ஒரு முன்னறி விப்பையும் குறிக்கிறது, அங்கு இதேபோன்ற ஏகபோகங்களும் இரட்டையர்களும் தங்கள் சொந்தக்காரர்கள் என்ற குற்றச்சாட்டுகள் வேகமாகப் பரவி வருகின்றன. தற்செயலாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு இண்டிகோ பங்களிப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்த முறையற்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலோ அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழு மூல மாகவோ ஒரு முறையான விசாரணையை உடனடியாகத் தொடங்கி, பொறுப்பான அனைவரின் பொறுப்பையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. விமானக் கட்டணங்களின் விகித வரம்பு எல்லா நேரங்களிலும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)