tamilnadu

காசா இனப் படுகொலைகளுக்கு கண்டனம்

காசா இனப் படுகொலைகளுக்கு கண்டனம்

முதலமைச்சர் பங்கேற்கிறார் சென்னை, அக்.3 - காசா இனப் படுகொலைகளை கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற் கும் ஆர்ப்பாட்டம் அக்.8 அன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:   காசா மீது இனப் படுகொலைகளை நடத்தி  வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இன வெறிப் பிடித்த இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன் படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி யும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னி றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை யில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் சென்னை யில் 8.10.2025 அன்று நடைபெறுகிறது.  அன்றைய தினம், காலை 10 மணிக்கு ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழ கத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் உ. வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச்  செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக நிறு வனத் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபு பக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக  வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. நித்தியா னந்தன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜன நாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகி யோர் கண்டன உரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், இரா. வேல்முருகன், ஜி.செல்வா, எஸ்.கோபால், பி.எஸ். பாரதி அண்ணா, கே.நேரு உள்ளிட் டோர் கலந்து கொள்கின்றனர். காசா மீது இனப் படுகொலைகளை அரங் கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடை பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி பொதுமக்களும், ஜன நாயக சக்திகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் பெருந்திரளாக கலந்து  கொண்டு, கண்டனக் குரலெழுப்பிட முன்வரு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.