தோழர் சோலை பழனி மறைவு! சிபிஎம் இரங்கல்
சென்னை, ஜன. 7 - திருவண்ணாமலை மாவட்ட ஆசிரி யர் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சோலை பழனி (77) உடல்நலக் குறைவு காரணமாக வியாழனன்று கால மானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். இரங்கல் செய்தியில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது: தோழர் சோலை பழனி ஆசிரியராக பணியாற்றியவர். 1970-களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் உருவாக்கப்பட்ட போது ஆசிரியர்களின் நலன் களுக்காக அயராது போராடியவர். பணியிடை நீக்கம், பழி வாங்கல், சிறைவாசம் அனுபவித்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். குறிப்பாக, செய்யாறு பகுதியில் தொழிலாளர்கள் - விவசாயி கள், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்து கட்சியை கட்டுவதில் முன்னணி தோழராக திகழ்ந்தவர். சிறந்த முற்போக்கு கவிஞர். அவரது மறைவு ஆசிரியர் இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத் தாருக்கும், உறவினர்களுக்கும், இயக்க தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
