சென்னை, டிச. 25 - தோழர் ஆர்.நல்லகண்ணு 100-ஆவது பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவும் (26.12.2024 - வியாழன் காலை 9 மணியளவில்) கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் (செவாலியே சிவாஜி கணேசன் சாலை) மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெறுகின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர் முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு வாழ்த்துக் கூற உள்ளனர்.