tamilnadu

img

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டு தாழ்த்தப்பட்டோருடன் பிற்படுத்தப்பட்டோருக்கும் விடுதலை பெற்றுத்தர போராடிய தனித்துவ தலைவர்

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டு  தாழ்த்தப்பட்டோருடன் பிற்படுத்தப்பட்டோருக்கும் விடுதலை பெற்றுத்தர போராடிய தனித்துவ தலைவர்

நாகப்பட்டினம், அக். 14- தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டு மின்றி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்  விடுதலை பெற்றுத்தர போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் தோழர் பி.எஸ்.தனுஷ் கோடி தனி ஒருவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டு துவக்க நிகழ்வு பாங்கல்  கடைவீதியில் அக்டோபர் 13 அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட செய லாளர் வி.மாரிமுத்து தலைமையில் நடந்த நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுபாஷ் சந்திரபோஸ், விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் கே.சித்தார்த்தன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.லதா, கீழ்வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் தோழர் பி.எஸ்.தனுஷ் கோடி குறித்து உரையாற்றினர். பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுரையாற்றிய கே.பால கிருஷ்ணன், கட்சித் தலைவர்கள் குறித்து இத்தகைய விழாக்கள் நடத்து வது எதிர்கால சந்ததிகளுக்கு வர லாற்றை எடுத்துரைப்பதாகும் என்று கூறினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவ சாயிகளும் விவசாய தொழிலாளர் களும் பண்ணை அடிமைகளாக இருந்த  போது, அந்த முறையை ஒழித்து வர்க்க  பேதத்தை எடுத்துரைத்த தோழர் சீனி வாச ராவ் அவர்கள் வழியில், தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டார் என்று சுட்டிக்காட்டினார். 30 ஆண்டுகள் ஊராட்சி தலைவராகவும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவ ராகவும், திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டார் என்று குறிப்பிட்டார். இன்று பண்ணை அடிமைத்தனம் இல்லை, இதற்கு காரணம் செங்கொடி தான் உழைப்பாளி மக்களுக்கு விடு தலையைப் பெற்றுத் தந்தது என்றார். பொருளாதார மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமின்றி, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் கட்சி நடத்தியதால்தான் வெற்றி பெற முடிந்தது என்று தெரிவித்தார். இவரின் நூறாண்டு துவக்கமான இந்த ஆண்டு முழுவதும் கருத்த ரங்குகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கோயில்கள் பெயரில் உள்ள நிலங்களை நிலமில்லாதவர்களுக்கே கிடைக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். பாஜக ஆக்டோபஸ் கட்சி எடப்பாடி பழனிசாமி தனது கட்சியை பாஜகவிற்கு உள்வாட கைக்கு விட்டு அரசியல் செய்வதாக விமர்சித்த அவர், பாஜக ஒரு ஆக்டோ பஸ் கட்சி, அது விரைவில் கூட்டணி கட்சிகளை விழுங்கி செரித்துவிடும் என்று எச்சரித்தார்.  திமுக செய்யும் நல்ல செயல் களுக்கும் பாசிசத்திற்கு எதிரான நட வடிக்கைகளுக்கும் ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், தொழி லாளர் உரிமைக்கும் மக்கள் நல னுக்கும் எதிராக அரசு செயல்படும் போது அதற்கு எதிராக போராடு வதில் தயங்கியதே இல்லை என்று  தெரிவித்தார். மக்களின் உரிமை களுக்காக போராடிய தலைவர்களின் வரலாற்றை எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை கட்சித் தோழர்கள் தொடர்ந்து செய்திட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் வீ.இராஜகுரு நன்றியுரையாற்றினார். (ந.நி)