தோழர் எம்.அய்யாவு காலமானார்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான தோழர் எம்.அய்யாவு (75) உடல்நலக் குறைவு காரண மாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். தோழர் எம்.அய்யாவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி ஒன்றியக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பின ராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். கடந்த 1996 முதல் 2001 வரை செங்கமேடு ஊராட்சி மன்றத் தலைவராக திறம்பட பணியாற்றியவர். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செய லாளர் முத்து உத்திராபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மூத்த தோழர்கள் எஸ்.பொன்னுச்சாமி, வி.துரைச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். பாலசுந்தரமூர்த்தி, டி.லட்சாதிபதி, ஒன்றியச் செயலாளர்கள் துரை.அரிபாஸ்கர், ஜி. பன்னீர்செல்வம், ஏ.லாசர், எஸ்.நாராய ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரை தொலைபேசி வாயி லாக குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். தோழர் அய்யாவுக்கு தில்லைமணி என்ற மனைவியும், பாரதிராஜா, துரைராஜா, இளவரசன் ஆகிய மகன்களும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி திங்கட்கிழமை நடை பெற்றது.