தோழர் குரு. சந்திரசேகரன் காலமானார்
திருவாரூர், மார்ச் 17-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான குரு. சந்திரசேகரன்(70), திங்கட்கிழமை திடீர் உடல் நல குறைவால் காலமானார்.
தோழர் குரு.சந்திரசேகரன், பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பொறுப்பேற்ற பணிகளில் சிறப்படன் செயலாற்றியவர். இந்நிலையில் திங்கட்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
திருவாரூர் நகராட்சி முடுக்கு தெருவில் உள்ள அவரின் இல்லத்தில் தோழரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தோழர் குரு.சந்திரசேகரன் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம், அகில இந்திய மாநில சம்மேளனம் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் சு. சுதாகர், மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கி. இளமாறன், மாநிலத் தலைவர் ந. ஜெயசந்திரன், மாநில பொருளாளர் எம்.வி. செந்தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, மாநிலச் செயலாளர் எஸ். புஷ்பநாதன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. சண்முகம், மாவட்டச் செயலாளர் வி. முனியன் உள்ளிட்ட தோழமை சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். செவ்வாய்க்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
