tamilnadu

img

உறுதிமிக்க தொழிலாளர் வர்க்க கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரம் கமலா நகரில் உள்ள தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கத்தில் (ஆனந்தா திருமண மஹால்) 2025 ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெற்றது. மாநாட்டில் 521 பிரதிநிதிகளும் (419 ஆண்கள், 102 பெண்கள்) 50 பார்வையாளர்களும் (42 ஆண்கள், 8 பெண்கள்) பங்கேற்றனர். மொத்தம் 571 தோழர்கள் கலந்து கொண்டனர். வயது விபரம் பார்க்கும்போது, 51-60 வயதினர் அதிகபட்சமாக 186 பேரும், அதைத் தொடர்ந்து 41-50 வயதினர் 155 பேரும் பங்கேற்றனர். இளம் தலைமுறையினர் (18-30 வயது) 42 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விருதுநகரைச் சேர்ந்த 19 வயது தோழர் ஆனந்த கண்ணன் மிக இளம் வயது பிரதிநிதியாக பங்கேற்றார். மூத்த பிரதிநிதியாக 84 வயதான தோழர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார்.  கல்வித் தகுதி அடிப்படையில், 134 பேர் பட்டமேற்படிப்பும், 102 பேர் பட்டப்படிப்பும் முடித்துள்ளனர். 24 வழக்கறிஞர்களும், 5 முனைவர் பட்டம் பெற்றவர்களும், 3 மருத்து வர்களும் பங்கேற்றனர். அடிப்படைக் கல்வி கூட இல்லாதவர்கள் 13 பேர் மட்டுமே.  பிறப்பு வர்க்க அடிப்படையில் பார்க்கையில், 255 தொழிலாளர்களும், 135 விவசாயத் தொழிலாளர்களும், 99 ஏழை விவசாயிகளும் பெரும்பான்மையாக உள்ளனர். சமூக கட்டுமானத்தில் 165 தலித் தோழர்களும், 21 இஸ்லாமியர்களும், 30 கிறிஸ்தவர்களும், 10 பழங்குடியினரும் பங்கேற்றனர்.  கட்சி அமைப்பு ரீதியாக 336 பேர் மாவட்டக் குழு உறுப்பினர்களாகவும், 85 பேர் மாநிலக் குழு உறுப்பினர்களாகவும், 4 பேர் மத்தியக் குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். 287 பேர் முழுநேர ஊழியர்களாகவும், 133 பேர் பகுதி நேர ஊழியர்களாக வும் பணியாற்றுகின்றனர். 

குறிப்பிடத்தக்க அம்சமாக, 200 தோழர்கள் சிறை அனுபவம் பெற்றவர்கள். இதில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் 2-3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அவசரநிலை காலத்தில் 36 தோழர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தோழர் எஸ்.ஏ.பெருமாள் 29 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.  கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவர்களில் தோழர்கள் டி.கே.ரங்கராஜன் மற்றும் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் 17 முறை மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தோழர்கள் அ.சவுந்தரராசன், ஆத்ரேயா, ப.சுந்தரராசன் ஆகியோர் 15 முறையும், ஏழு தோழர்கள் 14 முறையும் பங்கேற்றுள்ளனர்.  திருமண வாழ்வில் குறிப்பிடத்தக்க முற்போக்கு சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில், 123 தோழர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். 79 பேர் சாதி மறுப்பு திருமணம், 23 பேர் மத மறுப்பு திருமணம், 104 பேர் சடங்கு மறுப்பு திருமணம், 101 பேர் வரதட்சணை மறுப்பு திருமணம் செய்துள்ளனர். 27 தோழர்கள் இவை அனைத்தையும் மறுத்து திருமணம் செய்துள்ளனர். 

வெகுஜன அமைப்புகளில் செயல்படும் விதத்தில், 228 பேர் கட்சி ஸ்தாபன வேலைகளிலும், 96 பேர் தொழிற்சங்க வேலைகளிலும், 58 பேர் மாதர் அமைப்பு வேலைகளிலும், 24 பேர் மாணவர் அமைப்பு வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 213 பேர் மாவட்ட அளவிலும், 131 பேர் மாநில அளவிலும், 40 பேர் அகில இந்திய அளவிலும் வெகுஜன அமைப்புகளில் பொறுப்பு வகிக்கின்றனர்.  கட்சி பத்திரிகைகளான தீக்கதிர் (531 பேர்), மார்க்சிஸ்ட் (418 பேர்), செம்மலர் (280 பேர்) ஆகியவற்றை தொடர்ந்து படித்து வருகின்றனர். கட்சியில் சேர்ந்த காலத்தை பொறுத்தவரை, 1947-1963 காலகட்டத்தில் சேர்ந்த மூத்த தோழர்கள் இருவர் உள்ளனர். 1977-1991 காலகட்டத்தில் 197 பேரும், 1992-2002 காலகட்டத்தில் 160 பேரும், 2003-2022 காலகட்டத்தில் 168 பேரும் சேர்ந்துள்ளனர். 2022க்கு பிறகு 6 புதிய தோழர்கள் இணைந்துள்ளனர்.  வருமான நிலையை பொறுத்தவரை, பெரும்பாலான தோழர்கள் (212 பேர்)  ரூ.10,001 - 15,000 வருமான பிரிவில் உள்ளனர். 29 பேர் வருமானம் இல்லாதவர் களாகவும், 32 பேர் மட்டுமே ரூ.60,001க்கு மேல் வருமானம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.  அரசியல் பின்னணியை பொறுத்தவரை, 458 பேர் நேரடியாக கட்சியில் சேர்ந்தவர்கள். திமுக (48 பேர்), காங்கிரஸ் (15 பேர்), சிபிஐ (14 பேர்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து தோழர்கள் வந்து சேர்ந்துள்ளனர். 

மாநாட்டு பிரதிநிதிகளில் பல்வேறு வர்க்க/வெகுஜன அரங்கங்களில் இருந்து கட்சிக்கு  வந்துள்ளனர். வாலிபர் அரங்கத்தில் இருந்து 197 பேரும், மாணவர் அரங்கத்தில் இருந்து 143 பேரும், தொழிற்சங்க அரங்கத்தில் இருந்து 74 பேரும்,  மாதர் அரங்கத்தில் இருந்து 54 பேரும் கட்சிக்கு வந்தவர்கள். மேலும் மத்தியத்தர அரங்கம் (22 பேர்), கலை இலக்கிய அரங்கம் (10 பேர்), விவசாயிகள் சங்கம் (13 பேர்), விவசாயத் தொழிலாளர் சங்கம் (5 பேர்), மாற்றுத்திறனாளிகள் அரங்கம் (4 பேர்), அறி வியல் அரங்கம் (2 பேர்) ஆகியவற்றில் இருந்தும் கட்சிக்கு வந்து, பணியாற்றி பிரதிநிதி களாக பங்கேற்றுள்ளனர். 24 பேர் நேரடியாக கட்சி அரங்கத்தில் இருந்து வந்துள்ளனர்.  இந்த அறிக்கை, மாநாட்டு பிரதிநிதிகளின் தகுதியைக் காட்டுவது மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சியானது ஓர் உறுதிமிக்க தொழிலாளர்  வர்க்க கட்சியாக எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் பறை சாற்றுகிறது.