மதுரை:
தமிழகத்தில் கொரானாவோல் 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் யதார்த்த நிலையை ஆராய மத்தியக்குழு வருகிறது. மேலும் அகமதாபாத், சூரத், தானே, ஹைதராபாத் நகரங்களுக்கும் மத்தியக்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் நிலையை மதிப்பீடு செய்ய உள்துறை அமைச்சம் ஐந்து குழுக்களை அமைத்துள்ளது.
குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத், மகாராஷ்டிராவில் தானே, தெலுங்கானாவில் ஹைதராபாத் மற்றும் தமிழ்நாட்டின் சென்னை ஆகிய ஊர்களில் நிலைமை தீவிரமாக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து மத்திய குழுக்களும் சம்பந்தப்பட் மாநிலங்களுக்குச் நிலைமையை ஆராய்ந்து அதனடிப்படையில் மாநில அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை வகுத்துக்கொடுப்பர். நேராய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். மத்தியக்குழு ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்நிலை மாற்றம். ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம், அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், சமூக இடவெளியை கடைப்பிடித்தல், சுகாதார உள்கட்டமைப்பு போதுமான வதிகளுடன் தயார் நிலையில் உள்ளதா, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர், ஏழைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்யும்.
மத்தியக்குழு வருகை- பதற்றத்தில் தமிழக அரசு?
தமிழகத்தில் வழக்கம் போல் ஊரங்கு அமலில் உள்ளது. திங்களன்று மதுரையில் மட்டும் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. தொற்று பரவுமோ என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக அமைச்சர் உதயகுமாரே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்தியாளர்களை அறிவுறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசை சமாளிக்கவும் சரிக்கட்டவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் 26-ஆம் தேதி காலை முதல் 29-ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், சேலம், திருப்பூரில் 26-ஆம் தேதி காலை முதல் 28-ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் நாடு முழுவதும் 1,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 23,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,814 பேர் குணமடைந்துள்ளனர். 723 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வெள்ளியன்று தெரிவித்தார். மேலும், கடந்த 28 நாட்களில் நாட்டின் 15 மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை. நாட்டில் 80 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் யாருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை என்றார்.