தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகிற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதியும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.