tamilnadu

img

15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை,நவ.15- அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்க ரில் அமைய உள்ள சிப்காட் தொழிற் பேட்டைக்கும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கடந்த ஜனவரி மாதம் சென்னை யில் நடைபெற்ற உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டின் போது, தமிழ் நாட்டில் டீன் ஷுஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண் டது. மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான, மற்றும் பரவ லாக வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு சான்றாக தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இத்திட்டம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழில் பூங்காவானது, உடையார்பாளை யம் தாலுகாவில் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ளது. டீன் ஷூஸ் நிறுவனத்திற்கு சிப்காட் ஜெயங்கொண்டம் தொழில் பூங்காவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாய் முத லீட்டில், 15,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தமிழ் நாடு முதலமைச்சர் வெள்ளியன்று (நவ.15) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், கோவி. செழியன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி. ராஜா, மக்களவை உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் க.சோ.கா. கண்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு- வர்த்தகத் துறைச் செய லாளர் வி. அருண் ராய், டீன் ஷுஸ்  நிறுவனத்தின் துணைத் தலை வர்கள் ரிச்சாங் மற்றும் ஓட்டோயாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம்

இதனைத் தொடர்ந்து, வாரண வாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் - மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரி வாக்கத்தை துவக்கிவைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். பின்னா் அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடை பெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப் படவுள்ள புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடி வுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பில் அரியலூா்-பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இத்திட்டத்தில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாதம் உள்ள 76,705 குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றி ணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.