விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டப் பேரணியுடன் சிஐடியு மாநாடு நிறைவு தலைவர் சுதீப் தத்தா, பொதுச் செயலாளர் எளமரம் கரீம்
விசாகப்பட்டினம், ஜன. 4- இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க பிப்ரவரி 12 அன்று நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் என்ற அறைகூவ லுடனும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான பாஜக தலைமை யிலான அரசாங்கத்தின் நவீன பாசிச போக்குகளுக்கு எதிராக தொழி லாளர் - விவசாயிகள் வர்க்கத்தை ஒன்றுதிரட்டி மாபெரும் போர் தொடுப்போம் என்ற அறைகூவலுடனும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்திய மாநாடு நிறைவுபெற்றது. மாநாட்டின் நிறை வாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 4 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 2ஆயிரத்திற்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிலாளர்கள் பிரச்சனைகள்றித்து நடைபெற்ற விவாதத்தில் 55 பிரதிநிதிகள் 9 மணி நேரமும் மாற்று பொருளாதாரக் கொள்கைகள் குறித்து 52 பிரதிநிதிகள் 9 மணி நேரமும் என 18 மணி நேரம் ஆழமான விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்களுக்கு பதிலளித்து பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு இதனைத் தொடர்ந்து ஜனவரி 4 அன்று புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு அகில இந்திய தலைவராக சுதீப் தத்தா, பொதுச் செயலாளராக எளமரம் கரீம், பொருளாளராக எம்.சாய்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக தபன்சென், டாக்டர் கே.ஹேமலதா, டி.பி.ராமகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், ஜெ.மெர்சிகுட்டி அம்மா, ஆனாதி சாகு, பி.நந்தகுமார், டி.எல்.கராட், மாலதி சிட்டிபாபு, கே.சந்திரன் பிள்ளை, பிஷ்ணு மகந்தி, சுக்காராமுலு, ஜி.பேபிராணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய செயலாளர் களாக ஸ்வதேஷ் தேவ்ராய், காஷ்மீர் சிங் தாகூர், ஜி.சுகு மாறன், டி.டி.ராமானந்தன், ஏ.ஆர்.சிந்து, எஸ்.வரலட்சுமி, மீனாட்சி சுந்தரம், உஷா ராணி, மதுமிதா பந்தோபாத்தி யாயா, ஆர்.கருமலையான், தபன் சர்மா, பிரமோத் பிரதான், கே.என்.உமேஸ், சி.எச்.நரசிங்கராவ், தீபா ராஜன், லலித் மோகன் மிஸ்ரா, பாலாதுகு பாஸ்கர், கே.என்.கோபிநாத், ஜியா உல் ஆலம், சங்கர் தத்தா, எஸ்.கண்ணன், ஜிபன் சகா, சுரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிரந்தர அழைப்பாளர்களாக ஏ.கே.பத்மநாபன், மாணிக் தே, நாகேஸ்வரராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனராக ஏ.ஆர்.சிந்து தேர்வு செய்யப்பட்டார். மேற்கண்ட நிர்வாகிகள் உட்பட 425 பேர் கொண்ட பொதுக்குழுவும் 125 பேர் கொண்ட மத்திய நிர்வாகக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. பிரம்மாண்டப் பேரணி மாநாட்டின் நிறைவாக விசாகப்பட்டினத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.பேரணியையொட்டி விசாகப்பட்டினம் செங்கொடிகளால் நிறைந்து, செங்கடலாக காட்சியளித்தது.
