பிறந்த மாதம் முதல் பதின்மூன்றாவது மாதம் வரை உள்ள குழந்தைகள் நிறுத்தாமல், இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாக பேசுவதை கேட்கும்போது பெரியவர்களுக்கு அது ஒருபக்கம் மகிழ்ச்சி தருவதாகவும், இன்னொரு பக்கம் அர்த்தம் இல்லாத உளறல்களாகவும் தோன்றும். விசித்திரமான இந்த ஒலிகள் வளர்ந்தபிறகு பேச்சின் போது குரலை கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு உதவுகிறது. இதற்கான பயிற்சியே அவர்கள் வெளியிடும் மழலை ஒலிகள் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
உயிர் ஒலிகள் சொல்லும் கதைகள்
ஒரு வயது வரையுள்ள காலத்தில் அவர் கள் உருவாக்கும் இந்த ஒலிகளில் சிணுங் கல்கள் (squeals), உறுமல்கள் (growls) போன்றவை ஒன்றுசேர்ந்து குழுக்களாக வெளியிடப்படுகின்றன. “இது பல முக்கிய பயன்களை உடையது. குழந்தைகளுக்கு அவர்களின் பிற்கால வாழ்வில் ஏற்படக்கூடிய தகவல் தொடர்பு கோளாறுகளை கண்டு பிடிக்க இது பெரிதும் உதவும்” என்று ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியரும் அலபாமா பல்கலைக்கழக விஞ்ஞானியுமான டாக்டர் ஹுன்ஜூ யூ ((Dr Hyunjoo Yoo) கூறு கிறார். ”வெற்று உளறல்கள் போல தோன்றினா லும் இத்தகைய ஒலிகள் குழந்தை மொழியில் வழக்கமாக பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட இத்தகைய சில வகை ஒலி களை அவர்கள் வேண்டுமென்றே உரு வாக்கி வெளியிடுகின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வருங்காலத்தில் அவர் களின் பேச்சு கட்டுப்பாட்டிற்கு இந்த ஒலிகள் மிக முக்கியமானவை” என்று வாரிக் (Warwick) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் எட் டொனலன் (Dr Ed Donnellan) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை ப்ளோஸ்1 (Plos One) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 130 குழந்தைகளின் மழலைப்பேச்சொலிகள் அவர்களை பராமரிப்பவர்களின் வீடு களுக்கே நேரடியாகச் சென்று ஆய்வா ளர்களால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பிறந்த முதல் மாதம் முதல் ஒவ்வொரு குழந்தையின் குரலும் பதிவு செய்யப்பட் டது. ஒவ்வொரு ஒலிப்பதிவு தொகுப்பில் இருந்தும் ஐந்து நிமிட அளவுள்ள 21 பதிவு கள் விஞ்ஞானிகளால் சீரற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டது. அதில் அடங்கியிருக்கும் வோக்கண்ட்ஸ் (vocants) என்று அழைக்கப்படும் சிணுங்கல், உறுமல் மற்றும் உயிர் ஒலிகள் ஆராயப்பட்டன. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளின் குரல்கள் பதிவு செய்யப்பட வில்லை. அதனால் அந்த குழந்தைகள் ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. 1104பதிவு களில் இருந்து 15,774 குரல் தொகுப்புகள் கிடைத்தன. இவற்றில் அறுபது சதவிகிதத்திற் கும் அதிகமான பதிவுகளில் சிணுங்கல், உறு மல் போன்ற ஒலிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு மாதம் முதல் பதின்மூன்று மாதம் வரை வயதுடைய எல்லா 6 பிரிவு பதிவுகளி லும் குழந்தையால் இந்த வகை ஒலிகள் ஒன்று சேர்ந்தே பேசப்பட்டன. வாழ்வின் ஆரம் பத்தில் இருந்தே சிசுக்கள் தங்கள் குரலை ஆராய்ந்து பயிற்றுவிக்கின்றன என்ப தையே இது எடுத்துக்காட்டுகிறது. ஆனால் 3 முதல் 4 மாத வயதுடைய குழந்தைகள் வெளியிட்ட ஒலிகளின் சராசரி மிகக் குறை வாகவே இருந்தது. குழந்தை தன் குரலை பக்குவப்படுத்த இவ்வாறு செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆயிரம் அர்த்தங்களுடன் பேசும் மழலை
ஐந்து மாத வயதுக்கு பிறகு எழுப்பப் படும் ஒலிகளில் சிணுங்கல்கள் அதிகமாக இருந்தன. குரல் நாண்களை கட்டுப்படுத் தவே இது நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குழந்தைகளின் இந்த ஒலி களை பெரியவர்கள் அதே போல பேசிக் காட்டவேண்டும். அப்போது அது அவர்கள் நல்ல குரல் வளம் பெற உதவும் என்று இது குறித்து நடந்த முந்தைய ஆய்வுகள் கூறின. பெரியவர்கள் நேரம் ஒதுக்கி மழலை மொழி பேச்சுகளை கவனித்து அதற்கு பதில ளிக்கவேண்டும். குழந்தைகளின் பிற்கால வாழ்வில் அது மிகப் பயனுடையதாக அமை யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இனி நம்மால் புரிந்துகொள்ள முடியாத பாணியில் குழந்தைகள் மழலைமொழி பேசும்போது அவை பொருளற்றதாக தோன் றினாலும் அந்த ஒலிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஆயிரக்கணக்கான சுவாரசியம் நிறைந்த அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றன. குழந்தையின் வருங்கால வாழ்வின் வளம் அந்த பேச்சுகளில் அடங்கியிருக்கிறது என் பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்.