tamilnadu

img

தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம்! பரமக்குடியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம்! பரமக்குடியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

பரமக்குடி, ஜன. 17 - இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்ட சுதந்திரப்  போராட்ட வீரர் தியாகி இமா னுவேல் சேகரன் மணிமண்ட பத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் சனிக்கிழமை (ஜன. 17) திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் நிறுவப் பட்டுள்ள இமானுவேல் சேகர னின் முழு உருவ வெண்கலச் சிலையையும் திறந்து வைத்து, மலர் தூவி முதலமைச்சர் மரி யாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம்  தென்னரசு, ஆர்.எஸ். ராஜகண்ணப் பன், கே.ஆர். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், என். கயல் விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ்கனி, ராணி ஸ்ரீகுமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதுதவிர, தாட்கோ தலைவர்  இளையராஜா, மக்கள் விடு தலைக் கட்சியின் நிறுவனர் சு.க.  முருகவேல் ராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை  இயக்குநர் மரு. இராவைத்தி நாதன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தியாகி இமானுவேல் சேகரனார் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் வேதநாய கம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிக்கு, 1924-ஆம் ஆண்டு பிறந்த தியாகி வே. இமானுவேல் சேகரன், இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல்  கொடுத்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில்  கலந்து கொண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 1942-ஆம் ஆண்டு ‘வெள்ளை யனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.  1945-ஆம் ஆண்டு இந்திய இரா ணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார்.  1950-ஆம் ஆண்டு ஒடுக்கப் பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட் டோர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். 1954-ஆம் ஆண்டு இரட்டைக் குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக போராடிய அவர், 11.9. 1957 அன்று படுகொலை செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.