tamilnadu

img

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, டிச.23 -  இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர மான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த  அனைத்து மீனவர்களையும் விடுவிப்ப தற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி யுள்ளார். டிசம்பர் 22 அன்று இராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கைக் கடற்படை யினர் டிசம்பர் 23 அன்று சிறைப்பிடித்துள்ள தாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு படகு களும் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த  துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவ தாகவும் முதலமைச்சர் கவலையோடு தெரி வித்துள்ளார். இந்த நீண்ட கால பிரச்சனைக்கு நிரந்தர மான தீர்வை எட்டுவதற்கு கூட்டுப் பணிக்குழு  அல்லது மீனவர் அளவிலான பேச்சு வார்த்தையை விரைவில் கூட்டுவதற்கு ஒன்றிய அரசு, உரிய தூதரக நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.  தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடி படகுகளும், 62 மீனவர்களும் இலங்கை அரசின் வசம் காவலில் உள்ள தாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் மேலும் கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க வும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து  மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கு மாறு வலியுறுத்தியுள்ளார்.