tamilnadu

img

1 லட்சம் ஏழை - எளிய பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா!

சென்னை, ஜன.11- தமிழ்நாடு முழுவதும் ஏழை - எளிய பட்டியலின மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு  லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்  கப்படும் என்று முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறி வித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. அதைத் தொட ர்ந்து, சனிக்கிழமை (ஜன.11) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.  அப்போது நான்கு முக்கிய அறி விப்புகளை அவர் வெளியிட்டார். அவை வருமாறு: 7 சிறப்பு நீதிமன்றங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும்  சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்  கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதி களுக்கு, முன்விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத்துறை விதி கள் திருத்தம் செய்யப்படும்.

சாலைகளை சீரமைக்க ரூ.3,750 கோடி

நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சென்னை, மதுரை,  கோவை உள்ளிட்ட பல்வேறு மாநக ராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூ ராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்  திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்தி டவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து  750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற  சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 3 ஆயிரம் புதிய பேருந்துகள் மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள் முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும். இந்த அரசு பதவியேற்ற பின் ஏழை - எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வித மாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்  சீர்செய்து புதிதாக நிலங்களை கைய கப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப்  பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப் படும். இவ்வாறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவா தத்தில், தமிழ்நாடு முழுவதும் பட்டா கேட்டு காத்திருக்கும் மக்களுக்கு பட்டா  வழங்க சிறப்புத் திட்டத்தை கொண்டு  வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி வலி யுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.