தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம், துணைச் செயலாளர் கருணாகரன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்தை சந்தித்தனர். அப்போது, “குறவன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்திட, இந்திய பதிவாளர் துறை கேட்டுள்ள கூடுதல் விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டு பெற்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
