தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் மத்தியக் குழு ஆய்வு நெல் ஈரப்பதம் 22% ஆக உயர்த்தப்படுமா?
திருச்சிராப்பள்ளி/தஞ்சாவூர்/புதுக்கோட்டை, அக்.26 - தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததன் விளைவாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களி லும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளி லும் நெல்லின் ஈரப்பதம் அபாயகரமாக உயர்ந்துள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் நெல் கொள்முத லுக்கான வழக்கமான ஈரப்பத அளவு 17% ஆக இருக்கும் நிலையில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கடுமையான துய ரத்திற்கு ஆளாகினர். எனவே, நெல் கொள்முத லுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
மூன்று மத்தியக் குழுக்கள் மூலம் கள ஆய்வு தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கள நிலவரத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசின் உணவுத் துறை சார்பில் மூன்று குழுக்கள் தமிழகம் வந்தன. இதில் ஒரு குழு செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங் களில் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்க, மற்ற இரண்டு குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வைத் தொடங்கின. மத்திய உணவுத் துறை துணை இயக்குநர் ஆர்.கே.ஷாகி தலைமையில், தொழில்நுட்ப வல்லு நர்களான ராகுல் சர்மா மற்றும் தனூஜ் சர்மா ஆகி யோர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) திருச்சி மாவட்டம் வாளாடி, வேலாயுத புரம், நகர், பூவாளூர், கோமாக்குடி உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருச்சி மண்டல மேலாளர் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், பஞ்சாப் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்களான ஷோபித் சிவாச் மற்றும் ராகேஷ் பரலா ஆகி யோர் அடங்கிய இரண்டாவது குழுவினர், தஞ்சா வூர் அருகே ஆலக்குடி, ராராமுத்திரைக் கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டனர். இந்தக் குழுவுடன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்கு நர் ஆ.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரி கள் சென்றனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே கல்லாக் கோட்டையில் ஒன்றிய அரசு உணவு அமைச்சகத்தின் குழு அலுவலர் கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் மு.அருணா மற்றும் கந்தர்வக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது, நெல்லின் ஈரப்பதம் கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டு, மாதிரி நெல் மூட்டை கள் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டன. விவசாயிகளின் கோரிக்கைகள் ஆய்வுக்கு வந்த மத்தியக் குழுவினரிடம் விவ சாயிகள் தங்கள் வேதனையை நேரடியாக எடுத்து ரைத்தனர்.
அப்போது விவசாயிகள், மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருத்த நஷ்டத்திற்காக, ஈரப்பதத்தை உயர்த்து வதுடன், ஒன்றிய அரசு நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். மேலும், ஆய்வறிக்கையை உடனே வெளி யிட்டு, ஈரப்பதம் குறித்து முடிவெடுக்கும் அதி காரத்தை மாநில அரசிடமே வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மத்தியக் குழுவின் அறிக்கையின் அடிப்படை யில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என விவசாயிகள் ஆவ லுடன் காத்திருக்கின்றனர்.
