மதுரை,ஜன.16- பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (ஜன. 16) அன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றவுடன் இப்போட்டி யை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அணைந்தனர். இதில் முதல் சுற்று தொடங்கி 9 ஆவது சுற்று வரை சுமார் 989 காளைகளும் 370-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியின் முடிவில், சிறந்த மாடு பிடி வீரருக்கான முதல் பரிசை 20 காளை களைப் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் பெற்றார். அவ ருக்கு தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப் புள்ள நிசான் கார் பரிசாக வழங்கப் பட்டது. மேலும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை சார்பாக கன்றுடன் கூடிய கறவைப் பசு வழங்கப்பட்டது. அதே போல் இரண்டாம் இடம் பெற்ற மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ஸ்ரீதர் (14 காளை கள்) ஆட்டோ வாகனத்தை பரிசாக வென்றார். மூன்றாம் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விக்னேஷ் (10 காளைகள்) டிவிஎஸ் பைக் இருசக்கர வாகனத்தைப் பரிசாக வென்றார். நான்காம் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த மாடு பிடி வீரர் அஜய் (9 காளைகள்) டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாக னத்தைப் பரிசாக வென்றார்.
சிறந்த காளை
சிறந்த காளைக்கான முதல் பரி சாக சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் முன்னாள் மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன் சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசு வழங்கப்பட்டது. 2 வது இடம் பெற்ற எரசக்கநாயக்கனூர் வழக்கறிஞர் பார்த்தசாரதி மாட்டுக்கு திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.பி.ராஜா சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பெற்ற புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளை ஸ்கூட்டர் வாக னத்தை பரிசாக வென்றது. 4ஆம் இடம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த செந்தில் தொண்டைமான் காளைக்கு லோடு பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இணைந்து வழங்கினர்.