districts

img

பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டிகள்

பொறையூரில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டிகள்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பொறையூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 14 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தலைவர் இரா.சதீஷ், செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய தலைவர் பக. சத்யா, ஒன்றிய செயலாளர் மருத்துவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்கினர்.

நமச்சிவாயபுரத்தில் கோலப்போட்டி, சமத்துவபொங்கல் விழா

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சாவித்திரிபாய் மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஆயிரம் விளக்கு பகுதி நமசிவாயபுரத்தில் கோலப்போட்டி மற்றும் சமத்துவபொங்கல் விழா நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் வி.தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில், தா.பி.சத்திரத்தில் பொங்கல் விளையாட்டு  விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி, ரிச்சி தெரு கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தரமணி பெரியார்நகரில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துறைமுகம் பகுதி, திருவள்ளுவர் நகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றனர்.