100 நாள் வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
செங்கல்பட்டு, ஜன. 16- மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பணிவழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ப. சு.பாரதி அண்ணா மாவட்ட ஆட்சியிடம் அளித்துள்ள மனு விவரம் வருமாறு, செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சில லட்சம் மக்கள் பணியாளர்களாக இணைந்துள்ளனர். 2024-25ம் நிதியாண்டில் 100 நாட்களுக்கு வேலை வழங்குவதில் தேக்க நிலையுள்ளது. இதை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வரும் சூழலில் வேலை கேட்டு முறையீடு செய்தும், எழுத்துபூர்வமாக வேலைகேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிகையையும் எடுக்கவில்லை. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஒழலூர், ஆத்தூர் ஊராட்சிகளும், மதுராந்தகம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாக்கம், சிலாவட்டம் ஊராட்சிகள். அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேடந்தாங்கல் ஊராட்சி, சித்தாமூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இந்தலூர், பொறையூர், கொளத்தூர், அகரம் (கயநல்லூர்), கீழ்மருவத்தூர் ஆகிய ஊராட்சிகளில் வேலை வழங்குவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு நிர்வாகக் காரணங்களை காட்டி வேலை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியாண்டு முடிய இன்னமும் 2 மாதங்களே உள்ள நிலையில், வேலை கேட்போருக்கு வேலை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து சட்ட ரீதியாக வேலை உரிமையை அதனை நம்பி வாழும் ஏழை மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பழவேற்காட்டில் தடையை மீறி குளித்த இளைஞர் பலி
திருவள்ளூர், ஜன.16- பழவேற்காட்டில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று தடையை மீறி கடலில் குளிக்க சென்ற மோசஸ் என்பவர் கடலின் மூழ்கி பலியானார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் குளிக்க கூடாது என காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அறிவித்திருந்த நிலையில், புழல் ஜெயிலில் பணியாற்றும் காவல்துறையை சேர்ந்த காவலரின் மகன் மோசஸ் என்பவர் தனது நண்பர்களுடன் கோரை குப்பம் மற்றும் பழைய சாத்தான்குப்பம் அருகே சென்று குளித்துள்ளனர். அப்போது திடீரென கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளார். பின்பு உடனிருந்த நண்பர்கள் கூச்சலிட்டு அப்பகுதி வழியாக சென்றவர்களை அழைத்தபோது அவர்கள் மோசசை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர். மோசஸ் உடலை திருப்பாலைவனம் காவல்துறை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலில் குளிக்க சென்ற சென்னை மணலி சேர்ந்த ராமு என்ற மற்றொரு இளைஞர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவர் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அருகே கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமுவை காப்பாற்றி கரைசேர்த்தனர். துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மீனவர்களை காவல்துறையினர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மீனவர் வெட்டிக் கொலை
சென்னை, ஜன. 16- சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (30). மீன்பிடி தொழில் செய்து வந்த வினோத் மது போதையில் வீட்டின் அருகே இருக்கும் போது, அங்கு வந்த மர்ம கும்பல் வினோத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மீன்பிடி துறைமுகம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நரேஷ்குமார், கோகுல் , ரித்திக் ரோஷன், சுனில், முத்து, யுவராஜ், அபினேஷ் , லோகேஷ் ஆகிய 8 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை செய்ததை காவல் துறையினரிடம் காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. உலகநாதன் என்பவர் இரண்டு நாள் முன்பு திடீர் நகரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. காசிமேடு பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தடையற்ற போக்குவரத்து வழங்க என்பிசிஐ-எம்டிசி இணைந்தன
சென்னை, ஜன.16- சென்னை முழுவதும் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. இந்த ஒத்துழைப்பு மூலம் சென்னை மெட்ரோ, மாநகர பேருந்துகள் மற்றும் சென்னை மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களில் புதிய அட்டையை பயன்படுத்தலாம் இதனால் நீண்ட வரிசையில் இனி நிற்கத் தேவையில்லை.ஒரே கார்டு மூலமாக பயணத்தை தொடரலாம். தேசிய அளவில் பல்வேறு நகரங்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் வசதி உள்ளது. இதற்காக நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட RuPay On-The-Go திட்டம் இந்தியாவின் பல நகரங்களில் பொது போக்குவரத்தை எளிதாக்குகிறது. புதிய வசதியால் சென்னையில் லட்சக்கணக்கான பயணிகள் பயனடை வார்கள். இந்த எம்டிசி சிங்கார சென்னை ஒன் சிட்டி ஒன் கார்டை சென்னை மெட்ரோ ரயிலிலும் மாநகர பேருந்துகளிலும் மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்தலாம்.
அதிமுக பிரமுகர் எரித்து கொலையா?
கடலூர், ஜன.16- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே எம்.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விருத்தாசலம் அருகே உள்ள முதனை ஊராட்சிக்குட்பட்ட எம்.வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கதிர்காமன் (43) நண்பர்களுடன் சேர்ந்து முந்திரி தோப்பில் மது அருந்தியதாக கூறப்படு கிறது. அதிமுக பிரமுகரான கதிர்காமன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர். அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், முந்திரி தோப்பில் பாதி எரிந்த நிலையில் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இது குறித்து ஊமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது காணாமல்போனவரின் சடலமா என கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
சிப்காட் தொழிற்சாலையில் தொழிலாளி பலி
கடலூர், ஜன.16- கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறு வனத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழி லாளி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சிப்காட்டில் டி எஃப் இ பார்மா என்ற ஒரு மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கிழக்கு ராமா புரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா (22) என்பவர் கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சிவா படுகாயமடைந்தார். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் சிவாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயி ரிழந்து விட்டதாக கூறி னர். இது குறித்து தக வல் அறிந்த கடலூர் முது நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். மேலும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர்.காங் முன்னாள் எம்எல்ஏ, தந்தைக்கு சிறை
சென்னை, ஜன.16- சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி மாநில பொதுப் பணித்துறையில் மேற்பார்வை பொறி யாளராகவும், அக்ரோ சர்வீஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனில் பொது மேலாளராகவும் பணியாற்றிய வர் சி.ஆனந்தன். இவர் கடந்த 1997 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிக மாக ரூ.3.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி ஆனந்தி மற்றும் மகனும், என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசா ரணையின்போது ஆனந்தி மரண மடைந்ததால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. அதை யடுத்து தந்தை, மகன் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்த் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூ பிக்கப்பட்டுள்ளது எனக் கூறி இரு வருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கடந்த2018ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருமானத்துக்கு அதிக மாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்ட தாக அரசு அதிகாரியாக பணி யாற்றிய ஆனந்தன் மற்றும் தட்டாஞ்சாவடி முன்னாள் எம்எல்ஏ-வான அவரது மகன் அசோக் ஆனந்த் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சிபிஐ தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்கிறேன். பொதுவாக அரசு ஊழியர்கள் தங்களுக்கான வருமானம், சொத்துக்கள் மற்றும் கடன்களுக்கு முறையாக கணக்கு காண்பிக்க கடமைப்பட்டவர்கள். புலன் விசா ரணையில் உள்ள குறைபாடுகளை குற்றச்சாட்டு உள்ளாகும் பொது ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.