41ஆவது வட்டத்தில் பொங்கல் விழா
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்.கே. நகர் 41ஆவது வட்டம் கண்ணகி நகரில் நடைபெற்ற 26ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டியை மாவட்டச் செயலாளர் நித்தியராஜ் துவக்கி வைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா, சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் விஜய், பகுதிச் செயலாளர் விஜயகுமார், தலைவர் கோபி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதி, முகப்பேர் மேற்கு கிளைகள் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற்றது.
பாரதபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
செங்கல்பட்டு அடுத்த பாரதபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் கிளைச் செயலாளர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. பகுதி குழு தலைவர் குர்ஷித் பகுதி குழு உறுப்பினர் ஜெயலட்சுமி, மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அயப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரவாயல் பகுதி அயப்பாக்கம் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருகம்பாக்கத்தில் பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின விருகம்பாக்கம் பகுதி சூளைப்பள்ளம் கிளை சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.