tamilnadu

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை:
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் விசாரணையின்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனதுதாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் விசாரணை செய்தபோலீசார் அதிமுக முன்னாள் எம்எல்ஏநாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில், “2017 ஆம்ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைசெய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன்வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். 

இந்த வழக்கு புதனன்று  நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இவருடைய ஜாமீன்மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து இருந்த நிலையில் மீண்டும்இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதி இளம் பெண்ணை பெற்ற தாயுடன் சேர்ந்து பொறுப்பில் உள்ள ஒருவர்இதுபோன்ற செயலை செய்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததைஎவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். ஜாமீன்தர மறுத்து விசாரணையை ஒத்திவைத்தார்.