“டெபாசிட்டை பறிகொடுத்த அண்ணாமலை அடுத்த பிரதமர் போல் பேசலாமா?”
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநக ரான மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதி யில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மூத்த பாஜக தலைவர் அண்ணா மலை,”மும்பை என்பது மகாராஷ்டி ராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்” என்று பேசினார். இந்நிலையில், அண்ணாமலைக்கு “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி யின் பொதுச்செயலாளர் ஆதித்ய தாக்கரே,“அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்ற வர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். இது நியாயமா? தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்.. மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகா ராஷ்டிராவை அவமதித்துள்ளனர். இதை மராட்டிய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என அவர் கண்டனம் தெரிவித்தார்.
