முதுமையைத் தள்ளிப் போட உதவுமா கோலஜன்கள்?
கோலஜன்களை (collagen) எடுத்துக் கொண்டால் முதுமையைத் தள்ளிப்போடமுடியுமா? நீண்ட காலம் இளமையுடன் தோற்றமளிக்க பலர் கோலஜன் தூள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றாக வேறு வழிகளும் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கோலஜன்கள் என்பவை நம் உடலின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள். நாம் உண்ணும் உணவில் உள்ள புரதங்களில் இருந்து உறிஞ்சப்படும் அமினோ அமிலங்களால் இவை உருவாகின்றன. வகைகளும் நன்மைகளும் எலும்புகள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் உட்பட்ட பல்வேறு இடங்க ளில் இருபதுக்கும் மேற்பட்ட கோலஜன் வகைகள் உள்ளன. இவற்றில் டைப் சை (Types I), II மற்றும் III ஆகியவை நம் தோல், குருத்தெலும்பு மற்றும் இணைப்பு திசுக்களில் காணப்படும் பொதுவான வகைகள். இவை உட லிற்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் அளிக்கின்றன. சமீப ஆண்டுகளில் இவற்றை நம் முகத்தில் உள்ள தோலை இளமையான தோற்றத்துடன் இருக்க உதவும் புரதமாக பலர் கருதுகின்றனர். இவை முதுமையின் அறிகுறிகளை தாமதப்படுத்த உதவும் பொருளாகக் கருதப்படுவதில் உண்மை உள்ளதா? “அறிவியல்ரீதியாக இதில் உண்மை எதுவும்இல்லை. இது குறித்து தீவிர ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இதை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை. புரதங்களை வேறு வடிவில் எடுத்துக்கொள்கிறோம் என்பது தவிர கோலஜன்களால் வேறெந்தப் பயனும் இல்லை. வயதாகும்போது நம் உடலில் உள்ள கோலஜன்களின் அளவு குறைகிறது. இதனால் நம் முகத்தில் உள்ள தோல் சுருக்கமடைகிறது. மிருதுத் தன்மை குறைகிறது. இதை சரி செய்ய கோலஜன்கள் மட்டுமே ஒரே தீர்வு என்று கருதுவது தவறு. எதை யேனும் நாம் சாப்பிடும்போது அது நேராக நம் தோலுக்குப் சென்று சேர்வ தில்லை. என்றாலும் கோலஜன்களில் ஒரு பகுதி நம் தோலைப் பழுது பார்க்க உதவுகிறது. ஆனால் அது வாயில் இருந்து நேரடியாக நம் முகத்தில் உள்ள தோல் அல்லது சுருக்கங்களை அகற்ற பயன்படுவதில்லை. இதனால் இளமையுடன் இருப்பதற்கு இவை எந்த வகையிலும் உதவுவதில்லை. தாமாகவே தோலுக்குள் ஊடுருவிச் செல்லாது என்பதால் தோல் பராம ரிப்பிற்காக கிடைக்கும் கோலஜன் களை எடுத்துக் கொள்வதால் நீண்ட காலப் பயன்கள் ஏற்படுவதில்லை. இதனால் முதுமைத் தோற்றத்தில் மாறு தல்கள் உண்டாவதில்லை” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பிளா ஸ்டிக் அறுவை சிகிச்சை துறை பேரா சிரியர் டாக்டர் அப்ஷின் மோஸஹெபை (Dr Afshin Mosahebi) கூறுகிறார். “இளமையில் அழகாக இருக்கும் நம் தோல் சூரிய ஒளி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் மரபணுரீதியாக நாம் வயதாகும் முறையைப் பொறுத்து மாறுகிறது. வயதாவதை தாமதப்படுத்த புரதங்கள் அடங்கிய சரிவிகித உணவை உண்பது, சூரிய ஒளியைத் தவிர்ப்பது, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடு வது, அவ்வப்போது நீர் அருந்துவது மற்றும் ஹயலுரோனிக் அமிலம் போன்ற தோலை ஈரமாக வைத்திருக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்து வது சிறந்த தீர்வு” என்கிறார் டாக்டர் அப்ஷின். ஹயலுரோனிக் அமிலம் ஹயலுரோனிக் அமிலம் (Hyaluronic acid (HA)) என்பது நம் உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இது இணைப்பு திசுக்கள், மூட்டுகள், கண்கள் மற்றும் தோலில் அதிகமாக காணப்படுகிறது. இது க்ளைக்கோசமினோக்ளிக்கன் (glycosaminoglycan) என்ற நீண்ட சங்கிலியுடன் உள்ள சர்க்கரை வகை யைச் சேர்ந்த பொருள். இது நீரில் இருக்கும் தன் எடையை விட ஆயிரம் மடங்கு அதிகமாக நீரைப் பிடித்து வைத்துக்கொள்கிறது. இதனால் தோலை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்திருப்பதில் இப்பொருள் முக்கியப்பங்கு வகிக்கி றது. இணைப்பு திசுக்களில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தி வீக்கத்தைத் தடுக்கிறது. இது தோலை மிருதுவாக, இளமையாக வைத்திருக்க உதவு கிறது. தோலிற்கு ஒரு ஈரப்பதமூட்டியாக செயல்படுகிறது. வறட்சியை எதிர்த்துப் போராடுகிறது. சுருக்கங்களின் தோற் றத்தை குறைக்கிறது. இப்பொருள் பல்வேறு மருத்துவப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களில் பயன்படு கிறது. இன்றைய நவ நாகரீக உலகில் முதுமையை தள்ளிப்போட உதவும் பல பொருட்கள் விளம்பரம் செய்யப்படு கின்றன. இவற்றை உபயோகிப்பதற்கு முன்பு தகுந்த மருத்துவ ஆலோச னைகளைப் பெற்று விவேகத்துடன் பயன்படுத்தினால் நாம் நலமுடன் வாழ லாம் என்று ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
