tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் கொள்கையால் 4ஜி சேவையை தரமாக வழங்க முடியவில்லை

ஒன்றிய பாஜக அரசின் கொள்கையால்
4ஜி சேவையை தரமாக வழங்க முடியவில்லை

நாடு முழுவதும் 4 ஜி அலைக் கற்றை இருந்தும், ஒன்றிய அரசின் கொள்கையால் தரமான சேவை வழங்க முடியவில்லை என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு வருத்தம் தெரிவித் துள்ளார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்  தமிழ் மாநில 10 ஆவது மாநாடு செவ்வாயன்று சென்னை மீனம் பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பி. அபிமன்யு பேசியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒன்றிய அரசு முடக்குகிறது. தனியார்  நிறுவனங்கள் 5ஜி சேவை தொடங்கிய பிறகு, பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு 4ஜி சேவைக்கான அலைக் கற்றையை ஒன்றிய அரசு வழங்கி யது. இதற்கு தேவையான உபகர ணங்களை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்ய அனுமதி தர  மறுக்கிறது. இதற்கான செல்போன் கோபுரங்கள் போதிய அளவில் இல்லை. இதனால் 4ஜி அலைக் கற்றை இருந்தும், தரமான சேவை  வழங்க முடியாததால், வாடிக்கையா ளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றனர்.

இதை சரி  செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். 5ஜி உரிமத்தையும் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 80 ஆயிரம் ஊழியர்களை ஒன்றிய அரசு வெளியேற்றி உள்ளது. தற்போது உள்ள ஊழியர்கள் 35 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் ஊதிய  மாற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் ஊதிய மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் ஊழியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது போன்று ஊழியர்களுக்கும் வழங்க  வேண்டும். போக்குவரத்து படியை  உயர்த்த வேண்டும். 5 ஆண்டு களுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந் தம் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம். அதேசமயம் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு எதிராக அனைத்து ஊழியர்களையும் திரட்ட வேண்டும். அகில இந்திய மாநாடு சங்கத்தின் அகில இந்திய 11 ஆவது மாநாடு ஜூலை 22, 23 தேதி களில் கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி சங்கங்கள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத்  தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தேசிய கொடியை சங்கத்தின் அகில இந்திய  துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா ஏற்றினார். சங்க கொடியை அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு ஏற்றினார். உதவிச் செயலாளர் கே.சீனிவாசன் வரவேற்க, மாநில அமைப்புச் செய லாளர் ஜி.உமாராணி அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் பி.ராஜூவும், வரவு-செலவு அறிக்கையை பொரு ளாளர் எஸ்.அஸ்லம் பாஷாவும் சமர்ப்பித்தனர். தோழமைச் சங்கத் தலைவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.