சென்னை,பிப்.1- ஒன்றிய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான, கார்ப்பரேட் மற்றும் வசதி படைத்த வர்களுக்கு ஆதரவான பட்ஜெட். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீத மாக உயர்த்தப்பட்டுள்ளதால் பயிர் காப்பீட் டுத் துறையிலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்கும். பயிர் இழப்பீடு களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை இந்நிறு வனங்கள் விவசாயிகளுக்கு வழங்க மாட்டார்கள். விவசாயத்திற்கும் அது சார்ந்த துறைக ளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் போதிய ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. உரமானியம் 3400 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட எந்த நட வடிக்கையும் இல்லை. நாடு முழுவதும் விவசா யிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை ஒரு முறை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்புகள் எதுவுமில்லை, ஒட்டுமொத்தத்தில் ஒன்றிய அரசின் 2025-26க்கான பட்ஜெட் விவசாயி களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. எனவே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் பிப்ரவரி 5 கார்ப்பரேட்டுக்கு ஆதரவான, விவசாயிகள் விரோத பட்ஜெட் நகலெரிப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் இவ்வியக்கம் பரவலாக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.