tamilnadu

தனியார்மய நடவடிக்கைகளை மத்திய அரசே கைவிடுக

கோவை, ஜூன் 29–  பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனி யார்மயமாக்கும் நடவடிக்கையை  மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத் தியுள்ளது.  அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ் மாநில 5 ஆவது மாநாடு கோவையில் சனி யன்று துவங்கியது. பேரூர் துர்கா  மஹாலில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் மாணிக் கமூர்த்தி தலைமை தாங்கினார். முன்ன தாக மாநாட்டில் தேசிய கொடியை சங்கத்தின் அகில இந்திய துணை  பொருளாளர் கே.பங்கஜவல்லியும், சங்க கொடியை அகில இந்திய பொ துச்செயலாளர் கே.ஜி.ஜெயராஜ் ஆகி யோரும் ஏற்றிவைத்தனர். மாநில உதவி செயலாளர் என்.குப்புசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்புக்குழுவின் செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்புரை யாற்றினார். இம்மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.ஜி. ஜெயராஜ் துவக்கி வைத்து உரையாற் றினார். மாநில செயலாளர் சி.கே.நரசிம்மன் அறிக்கையை முன்வைத்து பேசினார். முன்னதாக, இம்மாநாட்டை வரவேற்புக்குழு தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாநில செயலாளர் ஏ.பாபுராதா கிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் பொ துச்செயலாளர் கே.ராகவேந்திரன் மற்றும் மோகன்தாஸ், ஜி.எஸ்.நரசிம்மன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின்  மாநில செயலாளர் சி.வினோத்குமார், உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பெர்லின் ஆலிஸ் மேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வித உதவியும் செய்யாத மத்திய அரசு, தனியார்கார்ப்ரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து வரு கிறது. இருப்பினும், தனியார் தொலை பேசி நிறுவனங்கள் இக்காலத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதே நேரம், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. மத்திய அரசின் எவ்விதஉதவியும் இல்லாமல், ஊழி யர்களின் உணர்வுமிக்க உழைப்பி னால் இது சாத்தியமாயிற்று. இந்நிலையில் பிஎஸ்என்எஸ் நிறுவ னத்தை மத்திய அரசு தனியார்மய மாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடு கிறது. மேலும்,பொதுத்துறை நிறுவ னங்களின் வசம் உள்ள நிலங்களை ஒருங்கினைத்து நில வங்கியை உரு வாக்கி தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சூழ்ச்சியை மேற் கொள்கிறது. இவ்வாறு மத்திய அரசு மக்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலை ஒருபோ தும் அனுமதிக்க முடியாது.