திண்டுக்கல், ஜுன் 22- அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 5-வது மாநில மாநாட்டு திண்டுக்கல்லில் நடை பெறுகிறது. திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 5-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் மண்டலத் தலைவர் வி.பி.ஆனந்தன் தலைமை வகித்தார். துணைப் பொதுச்செய லாளர்கள் ஜேம்ஸ்கஸ்பார், பாலை யா, பொருளாளர் ஜெகநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழுவிற்கு தலைவ ராக சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசனும், செயலாள ராக வி.பி.ஆனந்தனும், பொருளாள ராக ஜேம்ஸ் கஸ்பார் ராஜும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 50 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாநிலத்தலைவர் எஸ்.கிருஷணன் விளக்கி பேசினார். (நநி)