tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

கோவை, டிச.24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 40  யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் ஏ.எம்.காலனி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  கிளை சார்பாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் பொகளூர் ஆரம்ப  சுகாதார நிலையம் இணைந்து அண்மையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகா மிற்கு, கிளைச் செயலாளர் ஹரி மற்றும் கிளைத் தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க  மாவட்டப் பொருளாளர் அர்ஜுன் துவக்கி வைத்தார். கமிட்டி உறுப்பினர்கள் அல்லாஹ் பாக்ஸ், இப்ராஹிம் உள்ளிட்ட 40க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு 40 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது.