tamilnadu

img

பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு அப்பட்டமான துரோகம்

பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி வழங்குவதில்  தமிழகத்திற்கு அப்பட்டமான துரோகம்

புதுதில்லி, மார்ச் 17 - 16 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை களின்படி, நாட்டின் முதுகெலும்பாக உள்ள பஞ் சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பாதியைக் கூட ஒதுக்காமல்,  கிராமப்புற வளர்ச்சியை ஒன்றிய பாஜக அரசு முடக்கி வருவது நாடாளுமன்ற கேள்வி - பதில்  மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரும் இடைவெளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எழுப்பிய நட்சத்திரக் கேள்விக்கு (Starred Question No.254), பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பதில்  அதிர்ச்சியளிக்கும் உண்மைகளைத் தாங்கி வந் துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு நிதி ஆணையம் பரிந்துரைத்த தொகைக்கும், உண்மையில் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே மிகப்பெரும் இடை வெளி நிலவுகிறது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டில் (மார்ச் 6,  2026 வரை), பஞ்சாயத்துகளுக்காக மொத்தம் ரூ.  48,573 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் விடுவிக்கப்பட்டதோ வெறும் ரூ.  22,747.8 கோடி மட்டுமே. இது மொத்த ஒதுக்கீட்டில்  46.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது பாதிக் கும் மேலான நிதி இன்னும் மாநிலங்களுக்குச் சென்றடையவில்லை. தமிழகம் எதிர்கொள்ளும் கடும் புறக்கணிப்பு நிதி விடுவிப்பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்குப் பரிந்து ரைக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2,884.20  கோடி. ஆனால், இதுவரை விடுவிக்கப்பட்டதோ  வெறும் ரூ.637.93 கோடி மட்டுமே. இது  பரிந்துரைக்கப்பட்ட தொகையில் வெறும் 22 சத வீதம் மட்டுமே ஆகும். தமிழகத்தின் பெரும்பா லான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவை யில் வைக்கப்பட்டிருப்பது மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும். இதேபோல், தெலுங்கானாவிற்கு 2024-25 இல் பரிந்துரைக்கப்பட்ட ரூ.1,514 கோடியில் ரூ. 640 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கர்நாட காவிற்கு 2025-26 நிதியாண்டிற்காக ரூ. 2,551 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை ஒரு  ரூபாய் கூட விடுவிக்கப்படவில்லை என்பது பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள் முடக்கம் கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத் திற்காக வழங்கப்படும் ‘நிபந்தனைக்குட்பட்ட’ (Tied Grants) நிதியிலும் அரசு கைவைத்து உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட ரூ. 29,143 கோடியில்,  வெறும் ரூ. 12,270 கோடி மட்டுமே விடுவிக்கப் பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கான இந்த நிதி முடக்கம் கிராமப்புற சுகாதாரம் மற்றும்  குடிநீர் விநியோகத்தில் மிகப்பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்கள் மீது பழியைப் போடும் ஒன்றிய அரசு நிதி விடுவிக்கப்படாததற்குக் காரணம் என்ன  என்ற ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யின் கேள்விக்கு  மாநில அரசுகள் ‘நிதி பயன்பாட்டுச் சான்றிதழை’  (GTC) உரிய நேரத்தில் சமர்ப்பிக்காததே காரணம் என்று அமைச்சர் மழுப்பலான பதிலை அளித்து உள்ளார். ஒன்றிய அரசு விதித்துள்ள மிகக் கடு மையான மற்றும் சிக்கலான நிபந்தனைகளே மாநிலங்களால் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்று விமர்ச னங்கள் எழும் நிலையில், “ஒன்றிய அரசுத் தரப்பில் எந்தத் தாமதமும் இல்லை” என்று அமைச் சர் நழுவியுள்ளார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடும் கண்டனம் ஒன்றிய அரசின் இந்தப் போக்கு குறித்து ஆர். சச்சிதானந்தம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிதி விடுவிக்கப்படாததால் எந்தப் பணியும்  பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுவது  முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கிராமப்புற  பஞ்சாயத்துகள் நிதி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசின் இந்தப்  பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்  உள்ளது. குறிப்பாகத் தமிழகத்திற்கு வெறும் 22  சதவீத நிதியை மட்டும் வழங்கிவிட்டு, மற்ற மாநிலங்களுக்குப் பாரபட்சம் காட்டுவது கூட்டாட்சித்  தத்துவத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாக நெருக்கடியை உருவாக்க பாஜக அரசு திட்டமிட்டுச் செயல்படு கிறது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த நிதிப் புறக்கணிப்பை எதிர்த்துத் தொடர்ந்து  போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.