tamilnadu

img

தேசவிரோத குற்றச்சாட்டில் பாஜக நிர்வாகிகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு

தேசவிரோத குற்றச்சாட்டில் பாஜக நிர்வாகிகள்  ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் “இந்தியா” கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி) உள்ளார். ஆனால் சட்டம்-ஒழுங்கு, யூனியன் பிரதேச பாதுகாப்பு என அனைத் தும் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ஆளுநரின் (மனோஜ் சின்ஹா) கீழ் உள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீ ரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 850 மெகா வாட் “ரட்லே மின் திட்டத்தில் (Ratle Power Project)” பணி புரியும் 29 ஊழியர்களை ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தேசவிரோதி கள் மற்றும் சதித் திட்டத்தில் ஈடுப டுபவர்கள் எனப் பட்டியலிட்டுள் ளது. ரட்லே மின் திட்டத்தை  செயல்படுத்தும் ஹைதராபாத் தைச் சேர்ந்த “மேகா இன்ஜினி யரிங் (MEIL)” நிறுவனத்திற்கு கிஷ்த் வார் மாவட்ட சிறப்பு காவல் கண்கா ணிப்பாளர் நவம்பர் 1ஆம் தேதி ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ரட்லே மின் திட்டத்தில் பணி புரியும் 29 ஊழியர்கள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை வேலையி லிருந்து நீக்கவோ அல்லது தீவிர மாகக் கண்காணிக்க வேண்டும்” என அக்கடிதத்தில் அறிவுறுத்தினார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் தேசவிரோதிகள் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 29 பேரில் 3 பேர் பாஜகவைச் சேர்ந்த வர்கள் என ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக “தி வயர்” இணைய இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், காவல்துறை வெளி யிட்ட பட்டியலில் 20ஆவது இடத் தில் உள்ள ஜீவன் லால் தாக்கூர் பாஜகவின் திராப்ஷல்லா பிரிவின் மண்டல தலைவராக உள்ளார். 12ஆவது இடத்தில் உள்ள ஆசிப் உசேன் பாஜக பொதுச் செயலா ளராகப் பணியாற்றியவர். தற்போ தும் பாஜகவில் தான் உள்ளார். 2ஆவது இடத்தில் உள்ள ஷஷாத் உசேன் பாஜகவின் பூத் தலைவராக (Booth President) உள்ளார். மேலும் மூவரது பாஜக உறுப்பினர் பதிவு எண்ணும் உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் பட்டியலில் உள்ள 29 பேரில் மற்றொரு 3 பேர் கிஷ்த்வார் பகுதியில் 1992 முதல் தலைமறைவாக இருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கர வாத அமைப்பின் தளபதி ஜஹாங்கீர் சாரூரியின் உறவினர் கள் என்றும் செய்திகள் வெளியா கியுள்ளன. பாஜக மழுப்பல் கிஷ்த்வார் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கடிதத்தை வெளியிட்ட தும் பாஜக எம்எல்ஏ ஷாகுன் பரி கார் (கிஷ்த்வார்), அக்கட்சியின் மூத்த தலைவர் சுனில் சர்மாஆகிய இருவரும்,”ரட்லே மின் திட்ட பணிகள்  பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு காவல்துறை கடிதமே சான்று” என முன்பு கூறியுள்ளனர். ஆனால் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் பாஜகவினர் என தெரிந்த தும் ஷாகுன் பரிகார், சுனில் சர்மா  ஆகிய இருவரும் இன்று வரை கமுக்கமாக உள்ளனர்.