tamilnadu

img

மோடி ஒரு ‘பாகிஸ்தானி’ சொல்கிறார் பாஜக எம்.பி.,

மோடி  ஒரு  ‘பாகிஸ்தானி’ சொல்கிறார் பாஜக எம்.பி.,

மோடி ஒரு பாகிஸ்தானி என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்  நாகேந்திர ராய் கடுமையாக விமர்சித்துள்ளார்.   மேற்கு வங்க மாநிலம் கூச்பெ ஹார் மாவட்டத்தில் தனது ஆதரவா ளர்களிடையே பேசிய பாஜக எம்பி நாகேந்திர ராய், தனது சொந்தக் கட்சி யினரே ஆச்சரியப்படும் வகையில் இன வெறியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஆகியோர் “பாகிஸ்தானியர்கள்”  “வங்கதேசத்தவர்கள்” என்று கடுமை யாக விமர்சித்துள்ளார்.   எஸ்ஐஆர் ஆபத்தானது  மேலும் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த  நடவடிக்கை, மிகவும் ஆபத்தா னது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், மக்களின் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அரசு நலத்திட்டங்கள் மறுக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் மக்களின் இருப்பிடத்தை உறுதி செய்யத் தடுப்பு முகாம்கள் (Detention Camps) அமைக்கப்படலாம் என்றும், இந்தக் கணக்கெடுப்பை நடத்துபவர்களே வெளிநாட்டினர்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க பாஜக தலைவர் சமீக் பட்டாச்சார்யா, நாகேந்திர ராயின்  கருத்து கள் குறித்துப் பேச மறுத்துவிட்டார். இருப்பினும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் தடுப்பு முகாம்களு க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று  சமாளித்துள்ளார். எனினும் எஸ்ஐஆர் குறித்த பாஜக எம்பியின் பேச்சு மேற்கு வங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.