tamilnadu

img

நாட்டை உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன்

நாட்டை உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன்

புதுதில்லி உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி எம் எல்ஏ, வேலை கேட்டு வந்த  சிறுமி ஒருவரை பாலியல் வன்கொ டுமை செய்த வழக்கு நாட்டையே உலுக்கியது. இவ்வழக்கில் அவருக்கு  தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.   2017ஆம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழை த்துச் செல்லப்பட்ட சிறுமி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதி யின் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய் யப்பட்டார்.  இது தொடர்பான இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொய்வழக்கில் கைது  செய்யப்பட்டு காவல் நிலையத் தில் வைத்து கொலை செய்யப் பட்டார். சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கும், அவரின் தந்தை கொலை வழக்கும் தனித் தனி வழக்குகளாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. 2019 ஜூலை 28, அன்று உன் னாவ் நகரிலிருந்து, சிறுமி தன் சித்திகள் இருவருடனும், வழக்கறி ஞருடனும் ரேபரேலி சிறைக்கு வாக்குமூலம் கொடுக்கப் பயணித் துக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பயணித்த கார் மீது லாரி ஒன்று மோதி திட்டமிட்ட விபத்தை ஏற்படுத்தியது.  சிறுமியும், அவரின் வழக்கறி ஞரும் படுகாயங்களோடு மீட்கப் பட்டனர். காரில் பயணித்த அவரது இரண்டு சித்திகளும் விபத்தில் உயிரிழந்தனர்.அதன்பிறகு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  2019 ஆம் ஆண்டே எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  நீதிமன்ற உத்தரவு இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்கர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத், ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகி யோர் அடங்கிய தில்லி உயர்நீதி மன்ற அமர்வு டிசம்பர் 23 அன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவரது ஆயுள் தண்ட னையை நிறுத்தி வைப்பதாக வும், அவருக்கு ஜாமீன் வழங்கு வதாகவும் தெரிவித்துள்ளது. கண்துடைப்பு நிபந்தனைகள் ஜாமீன் வழங்குவதற்கு 15 லட்சம் ரூபாய்க்கான சொந்தப் பிணைப் பத்திரமும், அதே தொ கைக்கான மூன்று நபர் உத்தர வாதமும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.  மேலும்  பாதிக்கப்பட்ட பெண் ணின் வீட்டிலிருந்து 5 கி.மீ சுற்றள விற்குள் செல்லக்கூடாது. பாதிக் கப்பட்ட பெண் அல்லது அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவோ, மிரட்டவோ கூடாது. ஜாமீன் காலத்தில் தில்லியை விட்டு வெளியேறக்கூடாது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று கண் துடைப்பான நிபந்தனைகளை நீதிமன்றம் கூறியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார். இந்த கொலையில் தொடர்பு கொண்ட செங்கருக்கு ஏற்கெ னவே 10 ஆண்டுகள் சிறை தண்ட னை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிலுவையில் உள்ள தால் அவர் உடனடியாக சிறையி லிருந்து விடுதலையாக முடியாது என கூறப்படுகிறது.