தேர்தல் ஆணையத்தை பாஜக கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடல்
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் அரசியல் அறுவடை செய்ய முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், நெல் கொள்முதல் குறித்த எதிர்க் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகள் “புளுகு மூட்டைகள்” என்றும் அவர் பதிலடி கொடுத் துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த நடை முறையில் ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தைத் “தனது கைப்பாவை யாகப்” பயன்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் நடந்ததைப் போல, உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்த வர், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வெற்றி பெற பாஜகவும், அதிமுகவும் கணக்கு போடுவதாகக் குறிப் பிட்ட அவர், இதை எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு என்றும் உறுதியளித் துள்ளார்.