tamilnadu

img

விளையாட்டு உலகில் இந்தியா மீது அவப்பெயரை ஏற்படுத்த பாஜக தீவிரம் ஐபிஎல் உரிமையாளர்களை கண்காணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

விளையாட்டு உலகில் இந்தியா மீது அவப்பெயரை ஏற்படுத்த பாஜக தீவிரம் ஐபிஎல் உரிமையாளர்களை கண்காணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

புதுதில்லி இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போன்று, கிரிக்கெட் விளையாடும் நாடு களிலும் உள்ளூர் டி-20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் அணிகளை வாங்கியுள்ளது போல, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஐபிஎல் உரிமையாளர்கள் டி-20 அணிகளை வாங்கியும் அல்லது முதலீடும்  செய்துள்ளனர்.  இதனால் இந்தியா மட்டுமின்றி உலகள விலும் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது. இது விளையாட்டு உலகில் பெருமைக்கு உரிய விஷயம் தான். ஆனால் இந்த பெருமையை பாஜக குழி தோண்டி புதைக்க திட்டமிட்டு வருகிறது. ‘தி ஹண்ட்ரட்’ லீக் இங்கிலாந்து நாட்டின் ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடருக்கான ஏலம் மார்ச் மாதம் நடை பெறுகிறது. ஷாகீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், ஹாரிஸ் ரவூப் என 10க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் உட்பட 950-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. பாஜக மூலமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.  இங்கிலாந்து வாரியம் ஏற்காது ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னின்று நடத்துகிறது. விம்பிள்டன், இங்கிலிஷ் லீக் கால்பந்து தொடரில் பின்பற்றப்படும் மதம், நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரிலும் பின்பற்றப்படுகிறது. அதாவது, “யார் வேண்டுமானாலும் விளையாடலாம்; ஆனால் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்” என்பதே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் குறிக்கோள் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் புறக்கணிப்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்காது என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரி யத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கூறுகையில்,“‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் தனியார் முதலீடுகள் வந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவது பாதிக்கப்படாது. இதுதொடர்பாக கவனமாக இருப்போம்” என அவர் உறுதி அளித்தார். ஆனால்,“ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தலையிட முடியாது. ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் அந்நாட்டு (இந்தியா) அரசு மற்றும் இதர மறைமுக உத்தரவால் பாகிஸ்தான் வீரர்களை எடுக்காமல் போக வாய்ப்பு உள்ளது” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி ஆங்கிலம் கூறியுள்ளது.  இதனால் ஏலத்தையும், ஐபிஎல் உரிமை யாளர்களின் போக்கையும் கண்காணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆட்சபணை  2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான வெளிநாட்டு அணிகளில்  பாகிஸ்தான் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதனால் ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரின் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் உரிமையாளர்கள் புறக்கணித்தால், கண்டிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆட்சபணை தெரிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலை மை நிர்வாகி டாம் மொபாட் கூறுகையில், “ஒவ்வொரு வீரருக்கும் நியாயமான மற்றும் சமமான வாய்ப்புக்கான உரிமை இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு முடிவுகள் எப்போ தும் சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்ப டையில் இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு, இந்தியாவிற்கு வந்து பாகிஸ்தான் விளையாடாமல் இருப்பது, வங்கதேச வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் அனுமதி மறுத்தது மற்றும் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டால் இந்தியாவில் நடை பெற்று வரும் டி-20 உலகக்கோப்பையை  வங்க தேசம் புறக்கணித்தது உள்ளிட்ட பிரச்சனை களால் விளையாட்டு உலகில் ஏற்கெனவே இந்தியா கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.  இதில் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் பாகிஸ்தான் வீரர்களை புறக்கணிக்க ஐபிஎல் உரிமை யாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது, விளையாட்டு உலகில் இந்தியா விற்கு அவப்பெயர் உருவாகும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதெல்லாம் “பாஜகவின் இந்துத்துவா அர சியல்” என சமூக வலைத்தளங்களில் கண்ட னம் குவிந்து வருகிறது.  எம்.சதீஸ்குமார்