tamilnadu

img

அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட பாஜகவுக்கு அருகதை இல்லை!

அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட பாஜகவுக்கு அருகதை இல்லை!

கே.சாமுவேல் ராஜ் கடும் சாடல்

மயிலாடுதுறை, ஏப்.19-  மயிலாடுதுறை மாவட்டம், தரங் கம்பாடி வட்டம், திருவிடைக்கழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.  இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு “அம்பேத்கரும் ஜனநாயக மும்” என்கிற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.  தன் வாழ்நாள் முழுவதும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, தீண்டாமையை தடுத்து நிறுத்தும் கருத்து ஆயுதமாக இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழு வதும் மதம், இனம், நிறத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள், அம்பேத்கரை ஆயுதமாக பயன்படுத்தி வரும் காலத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெ ரிக்காவின் மகத்தான விடுதலைப் போராட்ட நாயகன் ஆபிரகாம் லிங்கன் பெயரிலும், அம்பேத்கரின் பெயரிலும் நிறைய அமைப்புகள் அமெரிக்காவில் செயல்படுகின்றன என்று சொன்னால் எல்லைகளை கடந்து அம்பேத்கரின் புகழும், தேவையும், செயல்பாடுகளும் உள்ளது.  அம்பேத்கர் தீண்டாமைக் கொடு மைக்கு எதிராக தலைமை தாங்கி நடத்திய இரண்டு போராட்டங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, நாசிக்கில் உள்ள ராமர் கோவிலுக்குள் தலித் மக்க ளை அழைத்துச்செல்கிற போராட்டம். மற்றொன்று மராட்டியத்திலுள்ள மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், தண்ணீர் அருந்த இருந்த தடையை மீறி தலித் மக்களை அக்குளத்தில் இறங்க வைத்து தண்ணீர் அருந்த வைத்தார். அப்போராட்டத்தில் காவல் துறை தடியடி நடத்தி இருக்கிறது. அந்த மிக முக்கியமான போராட்டத்தை அம்பேத்கருக்காக ஒருங்கிணைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் ஆர்.பி மோரே என்பதை பெருமையாக சொல்கிறேன். அம்பேத்கருக்கும், கம்யூனிஸ்ட்டுக ளுக்கும் வேறுபாடுகளை விட, ஒரு மைப்பாடு தான் அதிகம் இருந்தது. அம் பேத்கரின் கொள்கையை நெஞ்சில் சுமப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால் அம்பேத்கரின் கொள்கைக ளை குழிதோண்டி புதைக்கும் மத வெறி பிடித்த பாஜக, அவருக்கு விழா எடுப்பதை எப்படி ஏற்றுக் கொள் வது? எப்படி ஆண்டைகளின் கொட்டத் தையும், நில உடைமையாளர்களின் அட்டூழியத்தை ஒழித்தோமோ அதேபோன்று, பாஜக என்கிற மதவெறி அமைப்பை மண்ணோடு மண்ணாக புதைப்பது தான் நமது கடமை என கே.சாமுவேல்ராஜ் முழங்கினார்.