tamilnadu

img

இந்திய ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல் யுஎன்ஐ செய்தி அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்த பாஜக அரசு!

இந்திய ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல் யுஎன்ஐ செய்தி அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்த பாஜக அரசு!

புதுதில்லி, மார்ச் 21- இந்தியாவின் மிகப்பழமை யான மற்றும் மதிப்புமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்  றான யுஎன்ஐ (UNI - United  News of India) அலுவல கத்தை, ஒன்றிய பாஜக அரசின்  கட்டுப்பாட்டிலுள்ள தில்லி  காவல்துறை வலுக்கட்டாய மாக பூட்டி ‘சீல்’ வைத்துள் ளது. இதன்மூலம், நாட்டின் ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலை ஒன்றிய பாஜக அரசு நடத்தியுள்ளது. நில ஒதுக்கீடு ரத்து செய்யப்  பட்டதைக் காரணம் காட்டி,  ஒன்றிய அரசின் வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள  நிலம் மற்றும் மேம்பாட்டு அலு வலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத கொடூரம் தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஃபி மார்க்கில் உள்ள யுஎன்ஐ அலுவலகத்திற்குச் சென்ற தில்லி காவல்துறை, ஒரு பயங்  கரவாத எதிர்ப்பு நடவடிக்கை யைப் போன்ற சூழலை உரு வாக்கி அலுவலகத்தை ‘சீல்’ வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  யுஎன்ஐ ஊழியர்கள், அவர்களது உடை மைகளை எடுப்பதற்குக் கூட அவகாசமோ, அனு மதியோ அளிக்காமல், அத்தனை பேரையும் வலுக் கட்டாயமாக தில்லி காவல்துறை வெளியேற்றி யுள்ளது. இந்தச் செயலை “இந்திய ஊடக சுதந்திரத் தின் மீதான முன்னெப்போதும் இல்லாத கொடூரம்”  என யுஎன்ஐ நிறுவனத்தின் தற்போதைய உரி மையாளரான ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நிறுவனம் கடுமையாகச் சாடியுள்ளது. பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல்? இந்த நடவடிக்கையின் போது தில்லி காவல்து றையினர் பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அவர்களைத் தாக்கிய தாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடி யோவில், பெண் காவலர் ஒருவர் பெண் செய்தியா ளர் ஒருவரைத் தள்ளி விடுவதும், அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியில் இருந்த சில காவலர்கள்  மதுபோதையில் இருந்ததாகவும், வழக்கறி ஞர்கள் மற்றும் ஊழியர்களைக் காவல்துறையினர் தரக்குறைவாகப் பேசியதாகவும் யுஎன்ஐ நிறு வனம் குற்றம் சாட்டியுள்ளது. அதிகார அராஜகம் நீதிமன்ற உத்தரவு என்று கூறப்பட்டாலும், ஒரு செய்தி நிறுவனத்தின் மீது இவ்வளவு கடுமை யான போக்கைக் கையாள்வது ஏன், என்ற கேள்வி  எழுந்துள்ளது. “ஊழியர்களை உள்ளே வைத்து அடிப்பதும், நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை வெளியே நிற்க வைப்பதும் எந்த வகையான சட்ட  நடைமுறை?” என ஊடக அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் நேரடித் தாக்குத லாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. ஜன நாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும்  ஊடகங்களின் குரலை ஒடுக்கும் வகையில், இது போன்ற நடவடிக்கைகள் அமைந்திருப்பது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு  ஆரோக்கியமானதல்ல எனச் சமூக செயற் பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி வீடியோ எடுக்கப்பட்டு முறையாகவே நடத்தப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையர் சச்சின் சர்மா கூறியுள்ளார். ஆனால்,  களத்தில் இருந்த ஊழியர்களின் குமுறல்களும், வெளியாகியுள்ள வீடியோ ஆதாரங்களும் காவல் துறை அராஜகமாக நடந்து கொண்டிருப்பதையே உறுதிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத அடக்குமுறை!

யுஎன்ஐ ஊடகம் மீதான அடக்கு முறைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் எம்.ஏ. பேபி, சமூகவலைதள பக்கத்தில்  கண்டனம் தெரிவித் துள்ளார். “தில்லி ரபி மார்க்கில் உள்ள யுஎன்ஐ (UNI) அலுவலகத்தில் தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் அதிர்ச்சியளிக்கும் அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  அங்கு பத்திரிகையாளர்கள் வலுக்  கட்டாயமாக வெளியே இழுத்துச்  செல்லப்பட்டதும், அலைக் கழிக்  கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது. முன்னறிவிப்பு வழங்காம லும், தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்ள அவகாசம்  அளிக்காமலும் மேற்கொள்ளப் பட்ட இத்தகைய அடக்குமுறை களும், பெண் ஊழியர்கள் உட்பட  அங்கிருந்தவர்கள் நடத்தப்பட்ட விதமும் ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நீதிமன்ற உத்தரவைச் சாக்காக வைத்துக்கொண்டு இத்தகைய செயல்களை நியாயப்படுத்த முடியாது. அச்சுறுத்தலுக்கு மத்தியில்  ஒரு சுதந்திரமான பத்திரிகைத் துறை இயங்க முடியாது. அதி காரிகள் இதற்குப் பொறுப்பேற்க  வேண்டும் மற்றும் பத்திரிகை யாளர்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும்.” என்று அவர் கூறி யுள்ளார்.