சர்வதேச விமான நிலையமாகிறது
மதுரை! புதுதில்லி, மார்ச் 10 - மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய மாக தரமுயர்த்த வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை யாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய தோழர் பொ. மோகன் துவங்கி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வரை நீண்ட போராட்டத்தை இதற்காக நடத்தி வந்தனர். ஆனால், ஏதேதோ சாக்குப் போக்குகளை கூறி, மதுரை விமான நிலையத்தை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்து வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திடீரென மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.