tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் வணிகர்கள் ஆதரவுடன் நடைபெற்ற பந்த்... ரயில், சாலை மறியல் செய்த 1,100 பேர் கைது...

மதுரை:
பாரத் பந்த்- மதுரை புறநகர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சியினர் தெரிவித்தனர்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், அலங்காநல்லூர், சமயநல்லூர்,ஊமச்சிகுளம், யா.ஒத்தக்கடை, பேரையூர், தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்டபகுதிகளில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத் திற்கு தங்களது தார்மீக ஆதரவை தெரிவித்தனர்.

ரயில் மறியல்
சோழவந்தான் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்கச் சென்ற மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஏ.வேல் பாண்டி, சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஏ.எம்.ஜெயக்கொடி மற்றும் திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.அலங்காநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், எஸ்.ஆண்டிச்சாமி, கே.தவமணி, ஸ்டாலின். ஆறுமுகம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் குமரேசன்உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

சமயநல்லூரில் மறியலில் ஈடுபட்டமாநிலகுழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டக்குழு உறுப்பினர் கே.முருகேசன் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சொ.பாண்டியன், து.இராமமூர்த்தி, சிபிஐ கண்ணன். சிபிஐ(எம்எல்) மதிவாணன், மதசார்பற்ற ஜனதா தளம் மாநில செயலாளர் செல்லபாண்டி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்காட்டு காளைகளையும் அழைத்து வந்திருந்தனர். ஊமச்சிகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி தலைமையில் மறியலில் ஈடுபட்ட மேற்கு ஒன்றியச்செயலாளர் பி.ஜீவானந்தம், செ.ஆஞ்சி, எம்.சௌந்தர், பாலகிருஷ்ணன், சிபிஐ பழனிவேலு, சுருளிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் மகளிர் விடுதலை இயக்க
நிர்வாகி க.செல்வி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மு.பாலுச்சாமி, செ.கண்ணன் மற்றும் கே.எம்.முருகன், நல்.மூர்த்தி, மனோகர். ஏ.கஜேந்திரன், உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் ஒன்றியச் செயலாளர் சி.பாண்டியன், சிபிஐ பி.பூமிநாதன், குமரேசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மேலூரில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாசெயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அடக்கிவீரணன், வழக்கறிஞர் என்.பழனிச்சாமி, எஸ்.பி.மணவாளன், ஏ.ராஜேஸ்வரன், சிபிஐ க.மெய்யர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலாளர் அய்யாவு உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டனர்.திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன், மாவட்டக்குழுஉறுப்பினர்கள் என்.விஜயா, பொன்கிருஷ்ணன் மற்றும் எஸ்.எம்.பாண்டி, சி.பாண்டியன், கே.கே.ராஜா, எம்.முத்துகாளை, எம்.ஜெயக்குமார், பி.ஈஸ்வரி சிபிஐ பி.முத்துவேல் உட்படஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 
நாகமலை புதுக்கோட்டையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ஆர்.ராமகிருஷ்ணன், சிபிஐ தேசியகுழு உறுப்பினர் சி. சேதுராமன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் வாழ்த்திப் பேசினார்.
திருமங்கலம் பாரத் ஸ்ட்டேட் வங்கிமுன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் ஒன்றியச் செயலாளர் ஜி.முத்துராமன், மாவட்டக்குழு உறுப்பினர் க.பிரேமலதா, சிபிஐ ஒ.சுப்புகாளை, ஜி.சந்தானம் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளிக்குடியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஒன்றியச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன், .மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அரவிந்தன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.தே.கல்லுப்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் வி.சமயன், மணிக்கிருஷ்ணன், சி.முருகன், முனிச்சாமி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். 

பேரையூரில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.ராமகிருஷ்ணன், பி.ஆறுமுகம், எஸ்.பாலு உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.சாப்டூர் வடகரைப்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முத்துராணி, ஒன்றியச் செயலாளர் ராஜசங்கர், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் செல்லவேல், பேரையூர் தாலுகாச் செயலாளர் கிருஷ்ணன், பார்வர்டு பிளாக் வினோத் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டியில் பேரணி-மறியலுக்கு உசிலம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் இ.சுதந்திரம், நகர் செயலாளர்தங்கமலைப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லகண்ணு, சிபிஐ ஆர்.தங்கமலை, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்டச் செயலாளர் ஐ.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின்மண்டலச் செயலாளர் குருசாமி உட்படஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமங்கலத்தில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, செல்லம் பட்டி மாவட்டக் கவுன்சிலர் ரெட்காசி, சிபிஐ சி.ராமு, பார்வர்டு பிளாக் ஏ.எஸ்.ரவி, காங்கிரஸ் பொன்.மணிகண்டன் உட்பட ஏரளமானோர் கைது செய்யப் பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள்
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தே.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர்,வாடிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி, பசுமலை ஆகிய இடங்களில் சிஐடியு உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினர் செவ்வாய் அதிகாலை பணிமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.