states

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 2,700 குழந்தைத் திருமணங்கள்!

சென்னை, டிச. 26 - தமிழகத்தில் நாளுக்கு நாள் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அதிர்ச்சியளிக்கும்  புள்ளி விவரங்கள் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023, 2024 ஆகிய 2 ஆண்டு களில் நடைபெற்ற குழந்தைத் திரு மணங்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இதில், 2023-ஆம் ஆண்டு 1,054 குழந்தைத் திருமணங்களும், 2024-ஆம் ஆண்டு 1,640 குழந்தை திருமணங்களும் நடை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  குறிப்பாக ஈரோடு, திருநெல் வேலி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6   மாவட்டங்களில் குழந்தைத் திருமணங் களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான  மனித உரிமை மீறல்

குழந்தைத் திருமணம் மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே குழந்தை திரு மணங்களுக்கு மிக முக்கியக் காரண மாக இருக்கின்றன. குழந்தைத் திரு மணங்கள் பெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரு கின்றன. மேலும் அவர்களின் எதிர்காலக் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்து வாய்ப்புகளும் இத்திருமணங்கள் மூலம் பறிக்கப் படுகின்றன. குழந்தைத் திருமணத் திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிற குழந்தைகள் இளம் வயதிலேயே கரு வுறுவது, பிரசவத்தில் ஏற்படும் அபா யங்கள் போன்றவை அதிகரிக்கிறது. 

குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுத்தப்படுகிறது

பெண் யாரை, எப்போது திரு மணம் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதாகவே இத்திருமணங்கள் அமைகின்றன. சுதந்திரமாகவும், எந்த  வற்புறுத்தலும் இல்லாமல் எடுக்கப்பட வேண்டிய திருமண முடிவுகள் கட்டாயப்படுத்தி எடுக்கப்படுவது பல்வேறு சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், தயாராக இல்லாதபோது நடத்தப்படுகிற திருமணங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடுகின்றன. பெண் குழந்தை களை பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்து இத்திரு மணங்கள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளை குடும்பங்களில் சுமையாக பார்க்கும் சூழலில் இத்திரு மணங்கள் நடைபெறுகின்றன.

கடமையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறுகின்றனர்

இத்தகைய எண்ணற்ற பாதிப்புகளால், ஏற்கெனவே தடை செய்யப்பட்ட குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் இல்லாமல் முடங்கி உள்ளது. இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் கடமையினை நிறைவேற்ற தவறியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  குற்றம் இழைப்போர் தண்டிக்கப்பட்டாக வேண்டும் எனவே, குழந்தைத் திருமணத்திற்கு எதிரான தற்போதைய சட்டங்களை வலுவாக நடைமுறைப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளி களுக்கு தண்டனையை உறுதிப்படுத்திட காவல்துறை நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும். குழந்தைத் திரு மணங்களை தடுத்து நிறுத்த வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

அரசின் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்!

கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளவிலான கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்துவதுடன், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழந்தைத் திருமணத் தடுப்பு குழுக்களை ஏற்படுத்திட வேண்டும். குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமித்து செயல்படுத்திட வேண்டும். குழந்தைகள் உரிமை மீறல் தொடர் ர்பான பிரச்சனைகளில் உடனடியாக அரசு தலையிடுவதை உத்தரவாதப்படுத்திடவேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.