சென்னை,டிச.26- அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சமூக விரோதி களால் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி உள்ளது. வன்கொடுமை செயலை கண்டிப்பது டன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவசமாக மருத்துவ உதவியும், அப்பெண்ணை பாது காக்க நடவடிக்கை எடுக்க கோரி யும் தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் துறை அதிகாரி கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைதான நபருக்கு 15 நாள் காவல்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஞானசேகரனுக்கு இடது கால் மற்றும் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து மாவு கட்டு போட்ட பின்னர், சைதாப்பேட்டை நீதிபதி சுல்தான் ஹர்ஹான் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஞானசேகரன் அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையின் கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.