states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 13 - பொங்கல் திருநாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தன.  கடந்த 3 நாட்களில் சென்னை யில் இருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.  (ஜன.13) நிலவரப்படி மொத்தம் 3,950 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து  250 பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து, திங்கள்கிழமையும் ஏராளமானோர் பயணிப்பாளர்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடியை வட்டியாக செலுத்திய மின்சார வாரியம்

சென்னை, ஜன.13- தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் 1 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கியே நடைமுறை மூலதன செலவுகளும், புதிய மின் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.  மின் கொள்முதலுக்கே அதிகம் செல விடுவதால் தமிழ்நாடு மின்வாரி யத்திற்கு வரவை விட செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் பல்வேறு வட்டி விகிதங்களில் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60  லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படு கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மின் வாரியம் வட்டிக்காக செலவு செய்த தொகை 1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பதினாறாயிரத்து நானூற்று நாற்பது கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் இணை மின் நிலையம் அமைக்கும் பணியை மின் வாரியம் 2010-இல் தொடங்கியது.  இத்திட்டத்திற்கான செலவு தொள்ளாயிரத்து அறுபத்தைந்து கோடி  ரூபாயாகும். இதுவரை 6 ஆலை களில், மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் பணிகள் முழுமை பெற வில்லை.  ஆனால், திட்டத்திற்கு வாங்கிய கடனை விட அதிகமாக இதுவரை ஆயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம்  அகில  இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகம் ஜன.16-இல் திறப்பு

மதுரை, ஜன. 13 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மது ரையில் நடைபெறவுள்ளது.  இம்மாநாட்டிற்கான பணிகளின் துவக்கமாக, வரவேற்புக் குழு அலுவல கம் ஜனவரி 16 (வியாழக் கிழமை) காலை 9:30 மணிக்கு மதுரை தீக்கதிர் வளாகத்தில் திறக்கப்பட வுள்ளது. இந்நிகழ்வில் மாநாட்டு இலச்சினை வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை  வகிக்கிறார். வரவேற்புக் குழு செயலாளர் சு. வெங்க டேசன் எம்.பி.  வரவேற் கிறார். வரவேற்புக் குழுத்  தலைவர் கே.பாலகிருஷ் ணன் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  உ.வாசுகி, மாநாட்டு  இலச்சினை யை வெளியிடுகிறார். மத்தியக் குழு உறுப்பினர் கள், மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோத்தர் இன பழங்குடியினரின் அய்னோர், அம்னோர் திருவிழா 

கோத்தகிரி, ஜன.13- நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கோத்தர் இன பழங்குடியின மக்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தங்களின் குலதெய்வ பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இக்கோவில் விழாவில் கோத்தர் இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அய்னோர், அம்னோர் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படைப்பர். முக்கிய நிகழ்வாக புதுக்கோத்தகிரி கிராமத்திலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து, தங்களின் கலாச்சார இசை இசைத்து ஊர்வலமாக  நடந்து வந்து கோவில் விளக்கேற்றி வழிபட்டனர். திருவிழா வில் ஆண்கள், தங்களின் பாரம்பரிய கலாச்சார இசை இசைத்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். 

பொங்கல், வார விடுமுறையையொட்டி  ஏற்காட்டில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, ஜன.13- பொங்கல் பண்டிகை மற்றும் வார விடுமுறையை யொட்டி, ஏற்காடு மற்றும் பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா  பயணிகள், படகில் சவாரி சென்றும், பூங்காவில் விளை யாடியும் மகிழ்ந்தனர்.  லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா  தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கை யை கண்டு ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், ஏற்காட்டில் உள்ள அனைத்து கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

போகி, புகை மூட்டம், பனிமூட்டம் எதிரொலி:  சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

சென்னை, ஜன.13- போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. தில்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே  தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. துபாய், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, தில்லி, பெங்களூரு, கோவா செல்ல வேண்டிய விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. சென்னையில் இருந்து  புறப்பட வேண்டிய விமானங்களின் நேர மாற்றம் குறித்து  பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பிவைக்கப்பட்டன. 

இன்று 2 மணி வரை செயல்படும்  ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் 

சென்னை, ஜன.13- பொங்கல் விடுமுறை தினமான இன்று(செவ்வாய்க்கிழமை) ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிறு அட்டவணைப்படி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

கன்னியாகுமரி, ஜன.13- டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு, இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 7 நாட்கள் மழைக்கு  வாய்ப்பு: வானிலை மையம் தகவல் 

சென்னை, ஜன.13- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல்  19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி குடியரசு தின விழா: தமிழகம், புதுச்சேரியின் 12 விருதாளர்களுக்கு அழைப்பு

சென்னை, ஜன.13- தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 விருதாளர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா வரும் 26  ஆம் தேதியன்று கொண்டாடப்படு கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய நிகழ்ச்சிகளில்  பொதுமக்களின் பங்கேற்பை அதி கரிக்கும் வகை யில் அண்மைக் காலமாக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் படுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  விருதாளர்க ளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஜவுளி பிரிவில் தேசிய விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், மாமல்லபுரத் தைச் சேர்ந்த எம். தேவராஜ், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி, புதுச்சேரி வில்லிய னூரைச் சேர்ந்த கே.வெங்கடேசன், ஏ.சேகர் ஆகி யோரும் அடங்கு வர். பேரிடர் நிவாரண பணியாளர் கள், நீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், சிறப்பாக செயல்படும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் சிறந்த பயிற்சி மாணவர்கள், கிராம செவி லியர்கள், மனதின் குரல் நிகழ்ச்சி  யில் பங்கேற்றவர்கள், மாற்றுத்  திறனாளிகளுக்கான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர்கள், புதுப்பிக் கத்தக்க எரிசக்தி துறையில் ஈடு படுவோர், அங்கன்வாடி பணியா ளர்கள், சாலை பணிகளில் ஈடுபடு வோர், சிறந்த புத்தாக்க தொழில்  நிறு வனங்கள், சிறந்த காப்புரி மம் பெற்றவர்கள் உட்பட பலருக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சிறந்த உள்ளாட்சி அமைப்பு களை தேர்வு செய்வதற்காக அண்மையில் ஒன்றிய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி யாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஒன்றிய அரசின்  முக்கிய திட்டங்களில் குறைந்தது  6 திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியவர்கள் இப்பட்டியலில் அடங்குவர். வேலை வாய்ப்புக்களை உரு வாக்குதல், வருவாயை பெருக்கு தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள், குடியரசு தின அணிவகுப்புக்கான அழைப்புகளை பெற்றுள்ளன. உணவு, சுகாதாரம், தூய்மை, ஊட்டச்சத்து போன்ற பிரிவுகளிலும் சாதனையாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். இச்சிறப்பு அழைப்பாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவதுடன் தேசிய போர் நினைவுச் சின்னம், இந்திய பிரத மர்கள் அருங்காட்சியகம் மற்றும்  தில்லியில் உள்ள முக்கிய இடங் களையும் பார்வை யிடுவார்கள். அவர்கள் தங்களது துறை சார்ந்த  அமைச்சர்களுடன் கலந்துரை யாடவும் வாய்ப்புகளை பெறுவர்.

எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சீரழியும் சட்டம்-ஒழுங்கு புதுச்சேரி அரசு மீது சிபிஎம் கடும் விமர்சனம்

புதுச்சேரி, ஜன.13-  எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதால் புதுச்சேரி அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம்-கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள  பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட சோரியங்குப்பம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம்,  கும்ந்தாமேடு, மணமேடு கரையாம்புத்தூர் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் 25க்கும் மேற்பட்ட மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் அமைக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இளைஞர்களை சீரழிக்கும் விதமாகவும் அப்பகுதி பெண்கள் குழந்தைகள் மக்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக அரசு உள்ளது.  மேலும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் குப்பை மேடாக பாகூர் பகுதி  வருகிறது. இத்துடன், நாளுக்கு நாள் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதி கரித்து வருகிறது. பாகூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களால் ஒரே மாதத்தில் மட்டும் 6 பேர்  மரணமடைந்துள்ளனர். குடித்து விட்டு தகராறுகள், சாலையில் செல்பவர்களிடம் வம்பு இழுப்பது, பெண்கள் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்வது, தங்களுக்குள் அடித்துக் கொண்டு செத்து மடிவதும் அதிகரித்துள்ளது. ஆடு,மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டுவது, வழிப்பறி, பொருட்களை திருடுவது என தினந்தோறும் சமூக குற்றங்கள் நடந்து வரும் இடமாக பாகூர் மாறி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் வாரம் ஒரு குற்றச் சம்பவம் மற்றும் கொலை சம்பவம் நடக்கும் அளவுக்கு இடமாக மாறியுள்ளது. எனவே, குற்றங்களுக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக எல்லையோரம் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை நவாத்தோப்பில் மற்றும் சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காவல் துறை சோதனை சாவடி மற்றும் பாதுகாப்பு காவல் மையம் அமைக்க புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.