2004 டிசம்பர் 26 அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி எனும் ஆழிப் பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த துயரம் அரங்கேறியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி துயரத்தின் 20ஆம் ஆண்டு வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனொரு பகுதியாக மயிலாடுதுறையில் நடைபெற்ற அமைதி ஊர்வலம்.